28 ஆக., 2010

சி.ஐ.ஏவிடம் சம்பளம் வாங்கும் கர்ஸாயின் உதவியாளர்

வாஷிங்டன்,ஆக28:ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் நெருங்கிய உதவியாளரும், ஊழல் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவருமான முஹம்மது ஷியா ஸலாஹி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவிடம் சம்பளம் வாங்கியுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு கமிட்டியின் ஆளுமைத் தலைவரான ஸலாஹி வருடக்கணக்காக சி.ஐ.ஏவிடமிருந்து சம்பளம் கைப்பற்றுவதாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை ஆஃப்கன், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் எந்த வேலையை சி.ஐ.ஏவுக்காக ஸலாஹி மேற்கொண்டார் என்ற தகவல் தெரியவில்லை. சி.ஐ.ஏவுக்கு தகவல்கள் அளிப்பதும், அதிபர் மாளிகையில் அமெரிக்க ஆதிக்கத்தை அதிகரிப்பதுமே ஸலாஹி ஆற்றிய பணியாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

அரசு விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட நியூ அன்ஸாரி நிறுவனத்திற்கெதிராக விசாரணையை தடைச்செய்ய முயற்சிச் செய்தது, அரசு அதிகாரிகளுக்கு வாகனம் வாங்குவதில் ஊழல் நடத்தியது ஆகியவற்றிற்காக போடப்பட்ட வழக்கில் கடந்த ஜூலையில் ஸலாஹியை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால் கர்ஸாயி தலையிட்டு இவரை விடுதலைச் செய்தார்.

அதிபர் மாளிகையில் நடக்கும் ஊழல்களைக் குறித்து நன்றாக தெரிந்த நபரின் கைது தனக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கருதித்தான் கர்ஸாயி ஸலாஹியை விடுவித்துள்ளார் என அப்பத்திரிகை கூறுகிறது.

ஊழலுக்கு தலைமை வகிப்பவர் சி.ஐ.ஏவின் சம்பளக்காரர் பட்டியலில் உள்ளவர் என்பது வெளியானது கர்ஸாயியின் ஊழலைக் குறித்து குற்றஞ்சாட்டும் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சி.ஐ.ஏவிடம் சம்பளம் வாங்கும் கர்ஸாயின் உதவியாளர்"

கருத்துரையிடுக