2 ஆக., 2010

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஹமாஸ்

ஆக2:இஸ்ரேலுடன் எவ்விதத்திலும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

"பாலஸ்தீன்- இஸ்ரேலுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நேரடியாகவோ மறைமுகமாகவோ நியாயப்படுத்த முடியாது." என்று ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மிஷால் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் வற்புறுத்துதலின் பேரிலேயே நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

மூத்த ஃபலஸ்தீன தலைவர்,அரபுக்கள் சங்கத்தின் நேரடி அமைதி பேச்சுக்கான மறு அழைப்பை நிராகரித்து,இந்த பேச்சுவார்த்தையை முறைப்படுத்த முடியாது ஏனெனில் இதை அரபுக்கள் விரும்பி செய்யவில்லை மாறாக அவர்களின் மீது நிர்பந்தப் படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்து நிற்பதும்,போராடுவதுமே ஃபலஸ்தீன தேசத்துக்கு ஒரே வழி, இதுவே நமக்கு பெருமை மற்றும் கண்ணியத்திற்கு வழி என்று மிஷால் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மீண்டும் மீண்டும் கூறினார்.

கடந்த வியாழனன்று,அரபுக்கள் சங்கத்தின் அமைதி நடவடிக்கை கமிட்டி, பாலஸ்தீன்-இஸ்ரேலுக்கிடையேயான நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2008-ஜனவரி 2009 வரை ஹமாஸ் இயங்கும் காஸ்ஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் பலியாயினர், இதனால் மத்திய கிழக்கு அமைதி பேச்சு முறிவடைந்தது.

பலத்த உட்கட்சி எதிர்ப்பையும் மீறி மே மாதத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்த இஸ்ரேலுடன் சமீப பேச்சு வார்த்தையில் ஃபலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஹமாஸ்"

கருத்துரையிடுக