காபூல்,ஆக2:நெதர்லாந்து தங்களது படையினரை வாபஸ் பெறுவதன் மூலம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியாகும் முதல் நேட்டோ நாடாக ஆகியுள்ளது.இந்த வெளியேறுதலுக்கு கடந்த நான்கு வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டு வருவது டச்சு மக்களிடம் பிரசித்தி இல்லாமையினாலும் கடந்த தேர்தலில் அரசை மக்கள் வீழ்த்தியதும் காரணமாகும்.
1900 வீரர்களைக் கொண்ட டச்சுப் படையினர் விலகுவதால் போர்க்களத்தில் அந்த அளவு மாற்றம் ஏற்படாது எனினும் அரசியல் அளவில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.
உயர்ந்து வரும் படையினரின் சாவுகளும் நேட்டோவின் தலைமையகங்களில் போரைக் குறித்து ஏற்பட்டுவரும் சந்தேகங்களும் தான் முக்கிய காரணங்கள். இன்னும் போரில் ஈடுபட்டு வரும் கூட்டுப்படைகள் கூட இந்தப் போரின் முக்கியத்துவம் பற்றி சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டன.
2011ல் தனது 2700 இராணுவ வீரர்களை கனடா திரும்ப அழைத்துக்கொள்ளும் என்றும்,போலந்து பிரதமர் ப்ரோனிஸ்லா கொமொரோவ்ஸ்கி அவர்களோ தனது 2600 இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளப் போவதாக வாக்களித்துள்ளார்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய அரசுகளுக்கு தங்கள் படைகளையும் குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன. இவைகள் அமெரிக்கப் படைகளுக்கும் அரசுக்கும் மிகுந்த கஷ்டத்தை உருவாக்கும்.
பிரசிடெண்ட் ஓபாமவோ, ஜூலை 2011 லிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் செய்ய ஆரம்பிப்போம் என்று உறுதி அளித்திருக்கும் பட்சத்தில் ABC யின் 'This Week' 'இந்த வாரம்' நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த பாதுகாப்பு துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸோ திரும்பப் பெறும் படைகளின் எண்ணிக்கையோ மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
உயர்ந்து வரும் வீரர்களின் சாவுகள், ஆஃப்கான் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதில் உறுதியற்ற நிலை, லஞ்ச லாவண்யங்களில் திளைக்கும் மிகவும் பலவீனமான ஆஃப்கானிய (கர்சாயியின்) அரசு இவைகளுக்கு மத்தியில் டச்சுப் படைகள் வாபஸ் வாங்குவது ஆஃப்கானிலிருந்து வரும் கெட்ட செய்திகளாகும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த வருட ஜூலை மாதம்தான் அமெரிக்கப் படைகளுக்கு மிகவும் மோசமான மாதமாகும். இந்த மாதத்தில் மட்டும் 66 அமெரிக்கப்படை வீரர்கள் தாக்குதல்களில் பலியாயினர். நேட்டோ படைகள் தங்களது படைகளை குறைக்கும் இந்த சமயம் அமெரிக்கப்படைகளுக்கு மிகவும் ஆபத்து என அமெரிக்க கமோண்டர்கள் எச்சரித்துள்ளனர்.
நீண்ட காலமாக ஆஃப்கன் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காந்தகார் மற்றும் ஹெல்மண்ட் பிரதேசங்களில் தான் கடந்தமாதம் அமெரிக்கப்படையினரின் அதிக சாவுகள் நடந்த இடங்களாகும்.
2006ல் இருந்து தொடங்கிய டச்சுப்படையினரின் ஆஃப்கான் மிஷனில் (போரில்) மொத்தம் 24 டச்சுப்படையினர் உயிரிழந்தனர்.

0 கருத்துகள்: on "டச்சுப்படை:ஆஃப்கானிலிருந்து வெளியாகும் முதல் நேட்டோ படை"
கருத்துரையிடுக