25 ஆக., 2010

மனித உரிமை மீறல்:கனடா மீது ஆம்னஸ்டி குற்றச்சாட்டு

வாஷிங்டன்,ஆக25:கனடா நாட்டு அரசு கடுமையான மனித உரிமை மீறல்களை நடத்திவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் குற்றஞ்சாட்டியுள்ளது.

மனித உரிமையுடனான அந்நாட்டின் அணுகுமுறையில் கவலைக் கொள்வதாக ஆம்னஸ்டியின் புதிய பொதுச்செயலாளர் ஸலீல் ஷெட்டி தெரிவிக்கிறார்.

அந்நாட்டில் ஜனநாயகம் இல்லாமலாகி வருகிறது.விஷமத்தனமான கேள்விகளை கேட்டு பல அமைப்புகளின் நிதித்திரட்டலை தடுத்துள்ளது என ஷெட்டியை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

க்யூபாவில் அமெரிக்காவின் சிறைக்கொட்டகையான குவாண்டானாமோ சிறையில் வாடும் கனடா நாட்டைச் சார்ந்த குடிமகன் உமர் காதரை நாட்டிற்கு திரும்பக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். காதரின் சிறை சட்டவிரோதமானது. அமெரிக்க ராணுவ ட்ரிப்யூனலில் இம்மாதம் நடைபெறும் காதரின் விசாரணை அநீதி என்றும் ஷெட்டி தெரிவிக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் ஆஃப்கானில் வைத்து அமெரிக்க ராணுவம் கைதுச் செய்தபொழுது காதருக்கு 15 வயதே ஆகியிருந்தது. க்ரானடி எறிந்து அமெரிக்க ராணுவவீரனை கொல்ல முயன்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.குற்றத்தை ஒப்புக்கொள்ள கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் காதர் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

உணவோ, தண்ணீரோ இன்றி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மனித உரிமை மீறல்:கனடா மீது ஆம்னஸ்டி குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக