25 ஆக., 2010

ஆஃப்கானில் ராணுவத்தளத்தை விரிவுப்படுத்தும் அமெரிக்கா

காபூல்,ஆக25:ஆஃப்கானில் அமெரிக்காவின் ராணுவத்தளத்தை விரிவுப்படுத்தும் அதிபர் பாரக் ஒபாமாவின் கோரிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளித்துள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய மூன்று விமானத்தளங்களை அமைக்க 30 கோடி டாலரை ஒபாமா கோரியிருந்தார்.

அமெரிக்க ராணுவம் அதிககாலம் ஆஃப்கானில் முகாமிடுவதற்காகத்தான் விமானத்தளங்களை அதிகரிக்கிறது என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

போர் எதிர்ப்பு எம்.பிக்கள் இதனை எதிர்த்தனர்.ஆஃப்கான் தலை நகரான காபூலுக்கு சற்று வடக்கேதான் ஒரு விமானநிலையம் நிர்மாணிக்கப்படுகிறது. இன்னொன்று, தெற்கு மாகாணத்தின் ஹெல்மந்திலும், மூன்றாவது மஷாரி ஸெரீஃபிலும் நிர்மாணிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கோரிக்கையை பரிசீலித்து விமானத்தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஆஃப்கானிஸ்தான் அரசு இதுத் தொடர்பாக சிறப்புக் கோரிக்கை ஒன்றும் வைக்கவில்லை. அடுத்த ஆண்டு மத்தியில் நிர்மாணம் முடிக்கப்படும்.

2011 ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெறுவோம் என ஒபாமா அறிவித்திருந்தார். அத்தகையதொரு சூழலில் விமானத்தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையில்லை எனவும், அமெரிக்க ராணுவம் இன்னும் அதிக காலம் ஆப்கானில் தங்குவதற்கான ஆதாரம் என்றும் இது சுட்டிக் காட்டப்படுகிறது.

அதேவேளையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீது நடத்தவிரும்பும் தாக்குதலை முன்னிறுத்திதான் இந்த விமானத்தளங்கள் நிர்மாணிக்கப்படுவதாக அமெரிக்க மாத இதழான எக்ஸ்க்யூட்டிவ் இண்டலிஜன்ஸ் ரிவீவ் என்ற பத்திரிகையில் கார்ல் ஆஸ்குட் தெரிவிக்கிறார்.

தாலிபானை எதிர்கொள்ள விமானத்தளங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது என பெண்டகன் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் ராணுவத்தளத்தை விரிவுப்படுத்தும் அமெரிக்கா"

கருத்துரையிடுக