31 ஆக., 2010

'பிறப்புச் சான்றிதழை' நெற்றியில் ஒட்டிக் கொண்டு திரிய முடியாது-ஒபாமா டென்ஷன்

நியூஆர்லியன்ஸ்,ஆக31:"நான் அமெரிக்காவில் பிறந்தவன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழை எனது நெற்றியில் ஒட்டிக் கொண்டு திரிய முடியாது" என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

ஒபாமாவுக்கு எதிரான அல்லது எதிர்மறையான கருத்துக்கள் அமெரிக்காவில் படுவேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன. அவரது செல்வாக்கு வேகமாக சரிகிறது என்று அவ்வப்போது சர்வேயை எடுத்து விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒபாமாவை ஒரு முஸ்லீம் என்று ஐந்தில் ஒரு அமெரிக்கர் நினைப்பதாக சமீபத்தில் ஒரு சர்வே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வெள்ளை மாளிகை ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் ஒபாமா ஒரு கிறிஸ்தவர். மேலும், அதிபரின் மத நம்பிக்கை என்பது பொது விவாதத்திற்கு உட்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒபாமாவே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சர்வே குறித்து நான் கவலைப்படவில்லை. உண்மை எதுவோ அதுவே உண்மையாகும்.

இப்போதைய மீடியாக்களில் தவறான, அவதூறான செய்திகள் நிறைய வருகின்றன. அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

என்னைப் பற்றி இதுபோல நிறைய வதந்திகள். ஆனால் அவை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. அவற்றுக்குப் பின்னால் ஓடுவதை விட செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.

நான் எங்கு பிறந்தேன் என்பதை எல்லோருக்கும் தெரிவிப்பதற்காக எனது நெற்றியில் பெர்த் சர்டிபிகேட்டை ஒட்டிக் கொண்டு போய் வர முடியாது. இதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் ஒபாமா.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'பிறப்புச் சான்றிதழை' நெற்றியில் ஒட்டிக் கொண்டு திரிய முடியாது-ஒபாமா டென்ஷன்"

கருத்துரையிடுக