31 ஆக., 2010

வறுமைக்கோடு-வறுமை என்றால் என்ன?

ஆக,31:அமெரிக்காவில் ஏழையாக இருப்பவர் இந்தியாவில் ஏழையாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலை இல்லை. ஒன்றேகால் டாலருக்கு கீழே தினசரி வருமானமுடையவர் வறியவர்கள் என உலக வங்கி கூறுகிறது. ஒன்றேகால் டாலரில் இந்தியாவில் அத்தியாவசியமான சிலப் பொருட்களை வாங்கிவிடலாம்.

கல்வி, ஆரோக்கியம் உள்ளிடவைகளையெல்லாம் உலக வங்கி கவனத்தில் கொள்வதில்லை. ஆதலால் வருமானம் அதிகரிப்பதால் வறுமைக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதாக கருதவேண்டாம். இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறித்த அறிக்கைகள் பெரும்பாலும் விமர்சனத்திற்குரியதாக மாறியுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களான ஸபீனா அல்கிரயும், எம்மா ஸாண்டோஸும் இணைந்து வறுமையை அளப்பதற்கான புதிய சூத்திரம் ஒன்றிற்கு உருக்கொடுத்தது இந்த பின்னணியில்தான்.

அடுத்த அக்டோபர் மாதத்தில் ஐ.நா இந்த சூத்திரத்தின் நிபந்தனைகளை கவனத்தில் கொண்டே வறுமைக்கோட்டை அளவிடும்.

பலவகையான காரணிகளை கவனத்தில் கொண்டுதான் இருவரும் புதிய சூத்திரத்தை உருவாக்கியுள்ளனர். உதாரணத்திற்கு மண் தரையில் ஒருவர் படுத்து உறங்குகிறாரா?, மலம்,ஜலம் கழிப்பதற்கு வீட்டில் தனியாக வசதிகள் உண்டா?, குடிநீர் கிடைக்கிறதா?, அடிப்படை கல்வியை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் அருகில் உண்டா? உள்ளிட்ட 10 கேள்விகளை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதில் 3 கேள்விகளுக்கு பதில் எதிர்மறையாக வெளிப்பட்டால் அத்தகைய குடும்பங்களை வறியவர் பிரிவில் உட்படுத்தப்படும். இந்த நிபந்தனைகளை பின்பற்றினால் தினமும் ஒன்றே கால் டாலர் கிடைக்கும் சில குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுவிடுவர்.

உதாரணத்திற்கு புதிய சூத்திரத்தின்படி இந்தியாவில் ஒன்றேகால் டாலர் தினமும் வருமானமுள்ள சிலர் அடிப்படை வசதிகள் இல்லாததால் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றுவிடுவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வறுமைக்கோடு-வறுமை என்றால் என்ன?"

கருத்துரையிடுக