டெல்அவீவ்,ஆக21:ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட முன்னாள் இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர் ஒருவர் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளதோடு கூடுதல் வெறித்தனமான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளாள்.
இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மனிதத் தன்மையற்றது எனக்கூறிய ஒருவருக்கு பதிலளிக்கையில், கொலைகாரர்களிடம் மனிதநேயம் காட்ட தன்னால் இயலாது எனக்கூறியுள்ளார்.
இஸ்ரேலிய முன்னாள் பெண் ராணுவ வீரரான ஈடன் அபேர்ஜில். மேலும் அவர் கூறியுள்ளதாவது; "போரில் சட்டத்திற்கு இடமில்லை. அரபிகளை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கு கடுமையான அழிவு ஏற்படவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வாய்ப்புக் கிடைத்தால் அவர்களை நான் கூட்டுப்படுகொலைச் செய்வேன்." இவ்வாறு இணையதளத்தில் அளித்துள்ள செய்தியில் அபேர்ஜில் கூறுகிறாள்.
கண்களும்,கைகளும் கட்டிய நிலையில் உள்ள ஒரு ஃபலஸ்தீன் சிறைக்கைதியின் அருகில் அபேர்ஜில் புன்னகைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1 கருத்துகள்: on "போரில் சட்டத்திற்கு இடமில்லை:இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்"
ஒரு சமூகத்தை அளிக்கதுடித்து அதையும் இணையதளத்தில் வெளிப்படையாகவே கூறுகின்ற இவள் பயங்கரவாதி இல்லையா? இவளல்லாம் தீவிரவாதிகளாக எவர் பார்வைக்கும் தெரியமாட்டாளா?
கருத்துரையிடுக