21 ஆக., 2010

ஹோலோகாஸ்ட் கார்ட்டூன் வெளியிட்டதற்கு டச்சு முஸ்லிம் அமைப்பிற்கு அபராதம்

ஆம்ஸ்டர்டாம்,ஆக21:ஹோலோகாஸ்டில் மரணமடைந்த யூதர்களின் எண்ணிக்கையில் சந்தேகத்தை வெளிப்படுத்தும் கார்ட்டூன் வெளியிட்டதற்கு நெதர்லாந்தில் முஸ்லிம் அமைப்பு ஒன்றிற்கு அப்பீல் நீதிமன்றம் 3200 டாலர் அபராதம் விதித்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அரப் ஐரோப்பியன் லீகின் இணையதளத்தில் வெளியான இந்த கார்ட்டூன் தேவையில்லாமல் மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டிய அந்நாட்டு கீழ் நீதிமன்றம் தண்டனை அளிக்காமல் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கு ஆர்னம் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.இதில் அப்பீல் நீதிமன்றம் கீழ் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடிச் செய்துவிட்டு அபராதம் விதித்துள்ளது.

கருத்து சுதந்திரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் ஐரோப்பியன் மனித உரிமை நீதிமன்றம் ஹோலோகாஸ்டை மறுப்பதையும், விளையாட்டுத்தனமாக சித்தரிப்பதையும் மிக முக்கியத்துவத்துடன் காண்கிறது என அந்நீதிமன்றம் தனது தீர்ப்பில் வெளியிட்டுள்ளது.

ஆஷ்விட்ஸில் இரண்டுபேர் பிணங்களை நோக்கியவாறு உரையாடும் காட்சிதான் முஸ்லிம் அமைப்பான எ.இ.எல் வெளியிட்டுள்ள கார்ட்டூனில் அடங்கியுள்ளது. அதில் ஒருவர் கூறுகிறார்: 'அவர்களெல்லாம் யூதர்கள் என எனக்கு தோன்றவில்லை. இதற்கு இரண்டாமவர் கூறுகிறார்: எவ்வாறெனினும் எண்ணிக்கையை 60 லட்சமாக நிரப்பவேண்டும். என்று.

ஆனால் இதுக்குறித்து எ.இ.எல் கூறுகையில், தங்களுக்கு ஹோலோகாஸ்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும், கருத்து சுதந்திர விவகாரத்தில் நெதர்லாந்து அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதே நோக்கமென்றும், கூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு டென்மார்க் பத்திரிகையில் இந்த கார்ட்டூன் வெளியான பிறகுதான் எ.இ.எல் வெளியிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஹோலோகாஸ்ட் கார்ட்டூன் வெளியிட்டதற்கு டச்சு முஸ்லிம் அமைப்பிற்கு அபராதம்"

பெயரில்லா சொன்னது…

Ivanunga eppavume narapaya mavanunga thannu therindathu thane.

கருத்துரையிடுக