புதுடெல்லி,ஆக.22:வெளிநாடுவாழ் இந்தியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை அளிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியத்தேர்தலில் வாக்களிக்க தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வகை செய்யும் மசோதா இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 2010-ஐ அறிமுகப்படுத்தி மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியது:÷இப்புதிய திருத்தத்தின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் எந்த தேர்தலில் வாக்களிக்கலாம். அதற்கான நடைமுறைகள் என்ன என்பது இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. வாக்களிப்பதில் உள்ள நிபந்தனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன என்றார்.
தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். வெகு காலமாகவே அரசின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு வரப்பட்டாலும், இதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாகவே இதுவரை இது செயல்படுத்தப்படவில்லை. அவர்களை எந்த அடிப்படையில் பதிவு செய்வது மற்றும் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வாக்குப் பதிவு செய்வார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை ஒருங்கிணைத்து அதை செயல்படுத்துவது சிரமம் என்பதாலேயே இதுவரை செயல்படுத்தப்படாமல் இருந்தது.
2006-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒருங்கிணைந்த வரைவு மசோதாவை தயாரித்தது. இந்த பரிந்துரையை திரும்பப் பெற்று புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக மொய்லி கூறினார்.

0 கருத்துகள்: on "வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்"
கருத்துரையிடுக