புதுடெல்லி,ஆக22:சொராஹ்புதீன் ஷேக் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு கொலை வழக்கில் ராஜேஷ் பரத்வாஜ் என்பவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோனுவை காதலித்த ராஜேஷ் அவரை திருமணம் செய்ய மறுத்து கொலை செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2007-ல் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷின் தாயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் வி.எஸ்.சர்புர்கார், சிராக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. சொராஹ்புதீன் ஷேக் உள்ளிட்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனவே, மறுவிசாரணை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "சொராஹ்புதீன் ஷேக் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் மட்டுமே மறுவிசாரணை: உச்ச நீதிமன்றம்"
கருத்துரையிடுக