22 ஆக., 2010

ஊழலை வெளிப்படுத்தியவரை கொன்ற குஜராத் பாஜக எம்.பி

அகமதாபாத்,ஆக22:குஜராத்தில் சுரங்க ஊழலை வெளிப்படுத்தியவரை பாஜக எம்பியின் உறவினர், போலீஸ்காரர் உதவியுடன் கூலிப் படையை வைத்து கொலை செய்துள்ளார்.

குஜராத் மாநில பாஜக எம்.பி தினு போகா சோலங்கியின் குடும்பத்தினர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.அவர்கள் கிர் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டி இருப்பதாக புகார்கள் வந்தன.

இது குறித்து சமூக சேவகர் அமீத் ஜேத்வா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசிடம் தகவல் கேட்டிருந்தார்.

இந்நிலையில் அமீத் ஜேத்வா கடந்த மாதம் 20ம் தேதி அகமதாபாத் ஹைகோர்ட் அருகே சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சுட்டு கொன்று விட்டு தப்பினர்.

இது குறித்து கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தியதில் பகதூர் சிங் வதேர் என்ற போலீஸ்காரரை கைது செய்தனர்.

இவரது உத்தரவின் பேரில் பச்சன் சிவா, சைலேஷ் பாண்யா ஆகியோர் அமீத் ஜேத்வாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான போலீஸ்காரர் பகதூக் சிங் வதேரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது, எம்பி சோலங்கியின் உறவினரான சிவா சோலங்கி தான் அமித் ஜேத்வாவை கொலை செய்யச் சொன்னதாகவும், இதற்காக ரூ.11 லட்சம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் இப்போது சிவா சோலங்கியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தக் கொலையில் எம்.பி சோலங்கிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அவரிடமும் விரைவில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது

இந்தக் கொலையில் பாஜக எம்பிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காப்பாற்ற முயல்வதாகவும் கொலை செய்யப்பட்ட அமித் ஜேத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஊழலை வெளிப்படுத்தியவரை கொன்ற குஜராத் பாஜக எம்.பி"

கருத்துரையிடுக