22 ஆக., 2010

அப்துல் நாஸர் மஃதனி தொடர்பான நீதிமன்ற உத்தரவை காற்றில் பறத்திய கர்நாடக போலீஸ்

மடிக்கேரி(கர்நாடகா),ஆக22:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியிலிலுள்ள அப்துல் நாஸர் மஃதனியை ஆதாரம் சேகரிப்பதற்காக அவருடைய உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் நேற்று குடகு என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைதிற்கு பிறகு நடைபெறும் ஆதாரங்கள் சேகரிப்பின் பொழுது மஃதனியின் உடல்நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவும், வழக்கறிஞரின் கடுமையான எதிர்ப்பையும் காற்றில் பறத்திவிட்டு பெங்களூர் க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் 310 கிலோமீட்டர் தூரம் சாலைவழியாக கொண்டுச் சென்றனர்.

மூக்கில் இரத்தம் வந்ததால் அப்துல் நாஸர் மஃதனிக்கு என்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கவேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவக்குழு கூறியும் ஸ்கேன் எடுக்காமலேயே டி.சி.பி. ஓம்காரய்யாவின் தலைமையிலான போலீஸார் மஃதனியை அழைத்துச் சென்றுள்ளனர்.

மஃதனி நீண்டதூரம் பயணம் செய்து ஆதாரம் சேகரிப்பதற்கு கொண்டு செல்வதை வழக்கறிஞர் பி.உஸ்மான் கடிதம் அளித்திருந்த போதிலும் போலீஸ் அதனை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் மஃதனியின் உதவிக்காக ஒரு மலையாளி நபரை உடன் அழைத்துச்செல்ல கடைசி நிமிடத்தில் போலீஸ் ஒப்புக்கொண்டது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் நஸீரின் தலைமையில் குடகு என்ற இடத்தில் பயிற்சி முகாமில் மஃதனி பங்கெடுத்தார் என கர்நாடக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி தொடர்பான நீதிமன்ற உத்தரவை காற்றில் பறத்திய கர்நாடக போலீஸ்"

கருத்துரையிடுக