20 ஆக., 2010

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனம்: மக்களவை ஸ்தம்பித்தது

புதுடெல்லி,ஆக20:பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு எம்.பி எம்.பி.ராஜேஷ் என்பவர் பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனங்களை முன்வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு வரும் பேராசிரியரின் கைவெட்டு சம்பவத்தை மேற்கோள்காட்டி ராஜேஷ் தனது உரையை ஆரம்பித்தார்.

மேலும் அவர், பாப்புலர்ஃப்ரண்டின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றிய சி.டிக்கள் மற்றும் புத்தகங்களில் தேசவிரோத கருத்துகள் அடங்கியிருந்ததாகவும், சி.டியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் தலைவெட்டும் காட்சிகள் அடங்கியிருந்ததாகவும், இவ்விஷயங்களெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தாலிபான் மாடல் நீதிமன்றங்களை நடத்தி நீதித்துறைக்கு சவால் விடுவதாகவும், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்டிற்கு பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு அமைப்புகளால்தான் இதனை விசாரிக்க இயலும் எனவும், துரதிர்ஷ்டவசத்தால் மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் இவ்வியக்கத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளதால் அரசிற்கு அதில் விருப்பமில்லை எனவும் குற்றஞ் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, பி.டி.தாமஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் எழுந்து நின்று கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்த கட்சி பாதுகாவலராக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி கோரினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை நடுவேச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பித்துரை மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனம்: மக்களவை ஸ்தம்பித்தது"

PUTHIYATHENRAL சொன்னது…

சிந்திக்கவும்: இந்திய முஸ்லிம்கள் இனி ஜனநாயக வழியில் ஒரு போராட்டத்தை நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்பதையும், அரசியல் கட்சிகள் நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். இந்தியாவில் இயங்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்னிஸ்ட் எல்லாருக்கும் ஒரே சிந்தனைதான் அது முஸ்லிம்களை அழித்து ஹிந்து நாடு உருவாக்குவது. போலி ஜனநாயகத்தை விட்டு ஒழித்துவிட்டு உருப்புடுற வேலையபாருங்க. இன்னும் நீங்கள் முழிக்கவில்லை என்றால் ஸ்பெயின் வரலாறுதான் உங்களுக்கு இந்தியாவில் ஏற்படும்.ஒரு நூறு வருடங்களுக்குள் ஸ்பெயின் போல உங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும் நீங்கள் எப்படி அழிக்கப்பட்டு ஹிந்து ராஜ்ஜியம் உருவாகியது என்று.

பெயரில்லா சொன்னது…

புதிய தென்றல் அவர்களே
சத்திய பாதையில் பயனிக்கும் எவருக்கும் பொருமையும் ஸ்திரதன்மையும் மிக அவசியம். அதைத்தான் இஸ்திகாமத் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு இயக்கத்தை தடை செய்தால் அது அழிந்து விடும் என்றால் RSS இன்று இல்லை

கருத்துரையிடுக