20 ஆக., 2010

பங்களாதேஷ்:எதிர்கட்சி பத்திரிகையின் ஆசிரியருக்கு ஆறுமாதம் கடும் சிறை

டாக்கா,ஆக20:பங்களாதேஷ் நேசனலிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டின் செயல் ஆசிரியருக்கு பங்களாதேஷ் சுப்ரீம் கோர்ட் ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்புதான் அவரின் இத்தண்டணைக்குரிய குற்றம். அந்நாட்டில் சுப்ரீம் கோர்ட் தண்டனை அளிக்கும் முதல் வழக்காகும் இது.பி.என்.பி தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின் முன்னாள் ஆலோசகர்தான் தண்டிக்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர் மஹ்மூதுர் ரஹ்மான்.

அமர்தேஷ் என்ற பத்திரிகையின் ஆக்டிங் எடிட்டரான இவர் தேசத்துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் டாக்கா பணம் அபாரதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பத்திரிகையின் ரிப்போர்டர் வலீயுல்லாஹ் நுஃமானிற்கு ஒரு மாதம் சிறையும், வெளியீட்டாளர் ஹஷ்மத் அலிக்கு 10000 டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

'சுப்ரீம் கோர்ட் எப்பொழுதும் அரசிற்காக ஸ்டே-ஆர்டர் வெளியிடுகிறது' என்ற தலைப்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டதே குற்றமாகும்.

முக்கிய சட்டத்தை மீறியதாக அரசு அப்பத்திரிகைக்கு தடை ஏற்படுத்தியிருந்த பொழுதிலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றம் அத்தடையை தற்காலிகமாக ரத்துச் செய்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பங்களாதேஷ்:எதிர்கட்சி பத்திரிகையின் ஆசிரியருக்கு ஆறுமாதம் கடும் சிறை"

கருத்துரையிடுக