20 ஆக., 2010

நிவாரணக் கப்பலில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொள்ளை: ஆதாரம் கிடைத்தது

ஜெருசலம்,ஆக20:காஸ்ஸாவிற்கு சென்ற துருக்கி நிவாரணக் கப்பலின் மீது அக்கிரமமான முறையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம் நிவாரணப் பணியாளர்களின் லேப்டாப் கணினி, பணம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.

கொள்ளையடித்த லேப்டாப் கணினியை விற்றதற்காக இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவரையும், மூத்த அதிகாரி ஒருவரையும் கைதுச் செய்துள்ளதாக இஸ்ரேலிய வைநெட் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நிவாரணக்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அநியாயமாக 9 நிவாரண பணியாளர்களை படுகொலைச் செய்த இஸ்ரேலிய ராணுவம் அஷ்தோத் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட 6 சிறிய கப்பல்களில்தான் விலைமதிப்பான பொருட்களை கொள்ளையடித்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட லேட் டாப் கணினியை விற்ற ராணுவ வீரன் கடந்த திங்கள் கிழமை கைதுச் செய்யப்பட்டான்.கொள்ளையடிக்கப்பட்ட மேலும் பலபொருட்கள் அவனிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

இஸ்ரேலுக்கு கேவலத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் மேலும் பலர் கைதாவார்கள் என கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நிவாரணக் கப்பலில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொள்ளை: ஆதாரம் கிடைத்தது"

கருத்துரையிடுக