துபாய்,ஆக20:ஐக்கிய அரபு அமீரக அரசக் குடும்பத்தின் புகைப்படக் கலைஞரான நூர் அலி ராஷித் மரணமடைந்தார். அவருக்கு வயது 80 ஆகும்.
அபுதாபியின் அரசக் குடும்பமான நஹ்யான் குடும்பம் உள்ளிட்ட ஏராளமான ஆட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக நூர் அலி பணியாற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பைபாஸ் அறுவைச்சிகிட்சை செய்யப்பட்டது.
இந்திராகாந்தி,நெல்சன் மண்டேலா, ஜிம்மி கார்ட்டர், யாஸிர் அரஃபாத் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் உள்பட ஏறத்தாழ 30 லட்சம் புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 83 விருதுகளை பெற்றுள்ளார்.
இவருடைய மரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில் அனுதாபம் தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரக ராயல் புகைப்பட கலைஞர் நூர் அலி ராஷித் மரணம்"
கருத்துரையிடுக