12 ஆக., 2010

துருக்கி:எண்ணைக் குழாய் மீது தாக்குதல் இரண்டு பேர் மரணம்

அங்காரா,ஆக12:தென்கிழக்கு துருக்கிக்கு செல்லும் எண்ணைக் குழாய்க்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அரசு வட்டாரங்கள் பத்திரிகைகளுக்கு தகவல் அளித்துள்ளனர். குண்டுவெடிப்பில் எண்ணைக் குழாய் சேதமடைந்தது.இதனருகில் காரில் பயணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் குர்து போராளிகள் என சந்தேகிப்பதாக துருக்கி கூறுகிறது. 970 கிலோமீட்டர் நீளங்கொண்ட இந்த எண்ணைக் குழாய் வடக்கு ஈராக் நகரமான கிர்க்குக்கிலிருந்து துவங்குகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துருக்கி:எண்ணைக் குழாய் மீது தாக்குதல் இரண்டு பேர் மரணம்"

கருத்துரையிடுக