12 ஆக., 2010

ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் வலிமையுள்ள பாக்டீரியா: மருத்துவ உலகில் பதட்டம்

லண்டன்,ஆக12:வீரியம் கூடிய ஆண்டிபயாட்டிக்குகளின் பயனைக்கூட எதிர்க்கும் வலிமைக் கொண்ட புதிய வகை பாக்ட்ரீயாக்கள் பிரிட்டனில் சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இது சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக அமையும் என மருத்தவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்.டி.எம்-1 என்ற என்ஸைம் உற்பத்திச் செய்யும் இந்த பாக்டீரியாவை எதிர்க்க தற்போதைய ஆண்டிபயாட்டிக்குகளால் இயலாது என்பதுதான் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

அழகைக் கூட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அறுவைசிகிச்சை மேற்கொண்டு நாடுதிரும்பியவர்களிடம்தான் இத்தகைய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பாக்டீரியா உற்பத்திச் செய்யும் என்.டி.எம்-1 என்ஸைம் உடலின் இதர பாக்டீரியாக்களிலும் நுழையமுடிந்தால் அந்த பாக்டீரியாக்களும் ஆண்டிபயாட்டிக்குகளை எதிர்க்கத் துவங்கிவிடும்.

பாக்டீரியா நோயாளியிடமிருந்து பிறருக்கு பரவினால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மட்டும் 50 சம்பவங்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன.

பாக்டீரியா பிறருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய வழி, இவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், மருத்துவமனைகளையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, மருத்துவமனை உபகரணங்களின் விஷத்தன்மையை அகற்றி மருத்துவர்களும், மருத்துவமனை பணியாளர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் மருத்துவ விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதுள்ள பல்வேறு ஆண்டிபயாட்டிக்குகளை ஒன்றிணைத்து ஒரு எல்லை வரை பாக்டீரியா பரவுவதை தடுக்க இயலும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் வலிமையுள்ள பாக்டீரியா: மருத்துவ உலகில் பதட்டம்"

கருத்துரையிடுக