வாஷிங்டன்,ஆக12:விக்கிலீக்ஸ் இணையதளம் உளவறிந்த அமெரிக்க ராணுவ ரகசியங்களில் உள்ள ஆஃப்கானின் சாதாரண மக்களின் பெயர்களை நீக்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
அமெரிக்க ராணுவத்திற்கு தாலிபான்களைக் குறித்து ரகசியத் தகவல்களை உளவறிந்துக் கொடுத்த ஆஃப்கானிகளின் பெயர்களை வெளிப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் என ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
ஆஃப்கான் சுதந்திர மனித உரிமை கமிஷன், நிரபராதிகளுக்கான பிரச்சார அமைப்பு, ஓபன் சொசைட்டி இன்ஸ்ட்யூட், இண்டர்நேசனல் க்ரைசிஸ் க்ரூப் ஆகிய அமைப்புகள் விக்கிலீக் உளவறிந்த ரகசியங்களில் ஆஃப்கானிகளின் பெயர்களை நீக்கவேண்டும் எனக்கோரி விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியானுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளன.
அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவும் ஆஃப்கானிகளை தாலிபான் கொன்றதாக கூறுகின்றனர். லட்சத்திற்குமேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ராணுவ தகவல்களை விக்கிலீக் கடந்தமாதம் உளவறிந்து சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ் உளவறிந்த ரகசியங்களை எடிட் செய்யவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்"
கருத்துரையிடுக