12 ஆக., 2010

வி.எஸ்.அச்சுதானந்தனின் அறிக்கை அவருடைய பதவிக்கு உகந்ததல்ல: தேசிய சிறுபான்மை கமிஷன்

புதுடெல்லி,ஆக12:கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் அறிக்கை அவருடைய பதவிக்கு உகந்ததல்ல என தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் முஹம்மது ஷாஃபி குரைஷி தெரிவித்துள்ளார்.

பொறுப்புமிக்க பதவியிலிருக்கும் ஒருவர்,இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக,சட்டவிரோதமாக ஏதேனும் நடைப்பெற்றால் அதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் புகார் அளிக்க விரும்பினால் கமிஷனை அணுகலாம் எனவும், புகார் கிடைத்தால் கேரள முதல்வரோடும், மாநில அரசிடமும் அதற்கான விளக்கத்தைத் தேடுவோம் எனவும், தேவைப்பட்டால் கேரளாவிற்கு வந்து ஆதாரத்தை சேகரிப்போம் எனவும் குரைஷி தெரிவித்தார்.

விரும்பிய மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசியல் சட்டம் அனுமதியளிக்கிறது. பலரும் மதம் மாறுவது அவர்களுடைய விருப்பப்படியாகும்.

கர்நாடக அரசு தன்னை வேட்டையாடுவதுத் தொடர்பாக அப்துல்நாஸர் மஃதனி புகார் அளிக்க விரும்பினால் கமிஷனை அணுகலாம் என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வி.எஸ்.அச்சுதானந்தனின் அறிக்கை அவருடைய பதவிக்கு உகந்ததல்ல: தேசிய சிறுபான்மை கமிஷன்"

கருத்துரையிடுக