29 ஆக., 2010

காவி பயங்கரவாதம்:காங்கிரஸ் பல்டி

புதுடெல்லி,ஆக29:காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் இக்கூற்று காவிக்கட்சிகளான பா.ஜ.க, சிவசேனா வை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் ஊடகத்துறை தலைவருமான ஜனார்த்தன் ரெட்டி காவிக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு நிறமில்லை என்றும், சுதந்திர வரலாற்றுடன் தொடர்புடைய(?) பாரம்பரிய உண்மை என்றும் விளக்கமளித்துள்ளார். பிரச்சனை காவியல்ல. பயங்கரவாதம்தான் பிரச்சனை. பயங்கரவாதத்தை காவி என்றோ, சிவப்பு என்றோ, பச்சை என்றோ, வெள்ளை என்றோ சிறப்பிக்க முடியாது. அதன் நிறம் பரிபூரணமாக கறுப்புதான். இவ்வாறு ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவி பயங்கரவாதம்:காங்கிரஸ் பல்டி"

கருத்துரையிடுக