29 ஆக., 2010

பத்திரிகைத்துறையை அழிவுக்குள்ளாக்கும் பைட் நியூஸ்: பி.ஸாயிநாத்

திருவனந்தபுரம்,ஆக29:பத்திரிகைத்துறையை அழிவுக்குள்ளாக்கும் சக்தியாக பைட் நியூஸ் (காசு வாங்கி செய்தியை பிரசுரிப்பது) வளர்ந்துவருவதாக தி ஹிந்து ரூரல் அஃபயர்ஸின் எடிட்டர் பி.ஸாயிநாத் கவலைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சட்டமன்ற-பாராளுமன்ற தேர்தல்களில் 350-1000 கோடி ரூபாய் பெய்ட் நியூஸிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவில் 500 கோடி ரூபாய் அரசியல் வாதிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. கேரள பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக திருவனந்தபுரம் கேசரி ஹாலில் வைத்து ‘பெய்ட் நியூஸ் பத்திரிகை தர்மத்திற்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஸாயிநாத் உரை நிகழ்த்தினார்.

செய்திகளின் விலையை நிர்ணயித்த டாரிஃப் கார்டுகளுடன் மஹாராஷ்ட்ராவில் அரசியல் வாதிகளை சந்தித்த பத்திரிகையாளர்கள் ஏராளம். இதுத்தொடர்பான விளக்கமான அறிக்கை ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடத்தில் உள்ளது.ஃப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை எடுக்க மேற்கொண்ட முயற்சியை தடைச்செய்தது 3 கவுன்சில் உறுப்பினர்களாவர். அவர்கள் மூன்று பேருமே பத்திரிகைத்துறை முதலாளிகளாவர். செய்திகளுக்கு பணம் கிடைப்பதை தடுப்பதற்கு பத்திரிகை நிர்வாகங்கள் முயல்வதில்லை என்பதற்கான ஆதாரம்தான் இது.

பத்திரிகைத்துறை நிறுவனங்களில் குண்டர்படை ஏற்படுத்தி நடத்தும் பணம் சேகரிப்புதான் பெய்ட் நியூஸ். பெய்ட் நியூஸ் என்பது ஒருவர் தனிப்பட்ட ரீதியில் நடத்துவது அல்ல. மாறாக, அது ஒரு டீம் வொர்க்காகும். விளம்பரங்களும், அதன்மூலம் கிடைக்கும் வருமானங்களும்தான் பத்திரிகை நிறுவனங்களின் விருப்பம்.

காமன்வெல்த் விளையாட்டுத் தொடர்பான ஊழல்கள் பத்திரிகைகளில் ஏராளமாக வெளிவருகின்றன. ஆனால் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்பான ஊழல்கள் இதனைவிட அதிகமாக வெளிவரவேண்டியதாகும். காரணம், ஐ.பி.எல் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பர வருமானம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான்.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி உருவானபொழுது இந்தியாவிற்கு பாதிப்பில்லை என கூற சில பத்திரிகைகள் முயன்றன. கடந்த 2 வருடங்களுக்கிடையே பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாகும். அதனைக் குறித்து செய்தி வெளியிட பத்திரிகைகள் தயங்கின.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பத்திரிகைத்துறையை அழிவுக்குள்ளாக்கும் பைட் நியூஸ்: பி.ஸாயிநாத்"

கருத்துரையிடுக