அல் யவ்ம் ஸப்அ(ஏழாம் தினம்) என்ற பத்திரிகைதான் ‘முஹம்மது நபியின் விசாரணை’ என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தை வெளியிடும் திட்டத்தை அறிவித்திருந்தது.
நபியவர்கள் மீது மோசமான விமர்சனங்களைக் கொண்ட இரண்டு அத்தியாயங்கள் அப்புத்தகத்தில் உள்ளன. எகிப்திய எழுத்தாளர் அனீஸ் அல் தெகெய்தி என்பவர்தான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
கோப்டிக் சர்ச்சின் உதவியுடன் மதத்தை அவமதிப்பதற்கு ஊக்கமூட்டியதும், பிரிவினையைத் தூண்டியதும் பத்திரிகைச் செய்த குற்றம் என அப்பத்திரிகையின் இணையதளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அளித்துள்ள செய்தியில் கூறியுள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தைக் குறித்த 100 கேள்விகளும் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. புத்தக வெளியீட்டிற்கு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், பத்திரிகையின் முதன்மை எடிட்டர் காலித் ஸலாஹ் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். அல் அஸ்ஹரின் அங்கீகாரம் இல்லாமல் புத்தகத்தை வெளியிடமாட்டோம் என கூறிய அவர் கோப்டிக் சர்ச்சின் நன்கொடையை வாங்கியதாகக் கூறிய குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இணையதளத்திற்கு ஹேக்:நபியவர்களை அவமதிக்கும் புத்தக வெளியீடு கைவிடப்பட்டது"
கருத்துரையிடுக