3 ஆக., 2010

காமரூனின் அறிக்கை:பாகிஸ்தான் பிரிட்டீஷ் பிரதிநிதியை அழைத்தது

இஸ்லாமாபாத்,ஆக3:பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூனின் பாக்.விரோத அறிக்கையைக் கண்டித்து பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் பிரிட்டனின் பிரதிநிதியான ஹைக்கமிஷனர் ஆடம் தாம்ஸனை அழைத்தது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுக் குறித்தும், பாக்.அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியின் பிரிட்டன் பயணம் ஆகியவற்றைக் குறித்தும் விவாதித்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஊக்கமூட்டுகிறது என்ற காமரூனின் அறிக்கை கடும் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரின் பிரிட்டன் சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது.

பல்வேறு கட்சிகள் கராச்சியில் காமரூனின் உருவத்தை தீவைத்துக் கொழுத்தினர். இன்று பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் சர்தாரியின் பயணத்தை ரத்துச்செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.

நேற்று பாரிஸில் பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சர்தாரி ஐந்து தின சுற்றுப்பயணமாக பிரிட்டன் செல்லவிருக்கிறார். புதிய அரசியல் சூழலில் இந்த சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் காமரூனின் அறிக்கையில் கூடுதல் விளக்கத்தை கோருவோம் என செய்தி ஒலிபரப்பு அமைச்சர் கமர் ஸமான் கய்ரா கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமரூனின் அறிக்கை:பாகிஸ்தான் பிரிட்டீஷ் பிரதிநிதியை அழைத்தது"

கருத்துரையிடுக