
இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச் சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது.
இளநீரில் சோடியம் குளோரைடு,பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, ‘ஃபிரிட்ஜில்’ வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும்.வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம்.
இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது.சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.
0 கருத்துகள்: on "கோடைக்கு ஏற்ற இயற்கை இளநீர்"
கருத்துரையிடுக