ஸ்ரீநகர்,ஆக29:கஷ்மீர் பள்ளத்தாக்கில் துக்தரானா மில்லத் என்ற பெண்கள் அமைப்பின் தலைவர் ஆஸியா அந்தராபியையும் அவருடன் பணியாற்றிய ஃபல்மீதாவையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
நீண்டகாலம் தலைமறைவாகயிருந்த ஆஸியா அந்தராபியை மூத்த போலீஸ் சூப்பிரண்ட் ஆஷிக் புஹாரியின் தலைமையிலான போலீஸ் குழு கைதுச் செய்தது.
அந்தராபியை கைதுச் செய்ய போலீஸ் பல்வேறு குழுக்களை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், கஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சூழலில் ஸ்ரீநகர், சோப்போர்,ஸுன்ஸர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரின் 34 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டையை காண்பிக்கும் அரசுப் பணியாளர்களை அனுமதிக்குமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்கள் செய்யத் அலிஷா கிலானியையும், மீர்வாய்ஸ் ஃபாரூக்கையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைத்துள்ளது போலீஸ்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஸியா அந்தராபி கைது"
கருத்துரையிடுக