29 ஆக., 2010

கொள்ளைக்காரர் என குற்றஞ்சாட்டி காங்கிரஸ் தலைவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்

போபால்,ஆக29:கடந்த 22ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் பீந்த் மாவட்டத்தில் அம்மாநில போலீசாரால் கொள்ளைக்காரர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 இளைஞர்களில் ஒருவரான முன்னாள் ராணுவவீரர் அம்ஜத் கான் பீந்த் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தவர் என காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் துணைத்தலைவர் ராகேஷ் சிங் சதுர்வேதியும், காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்ஜத் கானின் மனைவியும், பீந்த் மாவட்ட லஹர் ப்ளாக் காங்கிரஸ் தலைவருமான யாஸ்மின் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், தனது கணவர் கார்கில் போரில் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரை பதவி உயர்வுக்காகவும், விருது பெறுவதற்காகவும் சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார்.

சாதாரண ஆடையில் போலீசார் அம்ஜத் கானை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர்.ஆனால் அவருடைய இறந்த உடல் காக்கி ஆடை அணிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அம்ஜத்கான் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவராகயிருந்தார். இவ்வாறு யாஸ்மின் கான் தெரிவித்துள்ளார்.

போலீஸ் சூப்பிரண்ட் சஞ்சல் சேகரின் தலைமையிலான போலீஸ் கும்பல்தான் என்கவுண்டர் நாடகம் நடத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

அம்ஜத்திற்கு க்ரிமினல் பின்னணி இல்லை என்றும் அவர்கள் உறுதியாக தெரிவித்தனர். பதக்கம் கிடைப்பதற்காக போலீஸ் சதித்திட்டம் தீட்டி நான்கு பேரையும் கூட்டுப் படுகொலைச் செய்துள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் போலீசாருக்கு எதிராக கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவுச் செய்யப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கொள்ளைக்காரர் என குற்றஞ்சாட்டி காங்கிரஸ் தலைவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்"

கருத்துரையிடுக