29 ஆக., 2010

மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் அருகிலிருந்தே கொல்லப்பட்டார்: தடயவியல் ஆய்வு

புதுடெல்லி,ஆக.29:மாவோயிஸ்ட் தலைவர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆஸாத், என்கவுன்ட்டர் முறையில் கொல்லப்படவில்லை. அவரை வெகு அருகிலிருந்தே சுட்டுக் கொன்றுள்ளனர்.தடயவியல் ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

நக்ஸல் தலைவர் ராஜ்குமார் கடந்த ஜூலை 1-ம் தேதி ஆந்திர மாநில போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டரில் அவர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆஸôத் கொலை செய்யப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

இந்நிலையில் ஆஸாத்தின் பிரேத பரிசோதனை முடிவுகள் மூன்று வெவ்வேறு நகர்களில் உள்ள தடயவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு யாருடையது என்பதைத் தெரிவிக்காமல் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், உயிரிழந்த நபர் 7.5 சென்டி மீட்டருக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டு இறந்துள்ளதாக தெரிவித்தனர்.தடயவியல் அறிக்கை முடிவை ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ளது.

மார்பின் இடது பகுதியில் 1செ.மீ. விட்டத்துக்கு கோள வடிவில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மார்வை துளைத்து பின்புறம் தோட்டா வெளியேறியிருக்க வேண்டும். தோட்டா உள் பாய்ந்த பகுதியின் முகப்பில் தீக்காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கும்,போலீஸார் அளிக்கும் விவரத்திற்கும் நிறைய முரண்பாடு உள்ளது.

போலீஸாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஆஸாத் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.ஆனால் அது உண்மையல்ல என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் அருகிலிருந்தே கொல்லப்பட்டார்: தடயவியல் ஆய்வு"

கருத்துரையிடுக