கொல்கத்தா,ஆக29:என்கவுன்ட்டர் மூலம் ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு வழக்கின் ஆதாரமாக இருந்தவரை மேற்குவங்க அரசு கொன்று விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உமாகாந்த் மஹதோ, போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.
இந்நிலையில் ரயில் கவிழ்ப்பு சதியில் ஆதாரமாக இருந்தவரைக் மேற்குவங்கத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு கொன்று விட்டதாக மம்தா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாணவர் பிரிவு பேரணியில் பங்கேற்ற அவர்,உமாகாந்த் மஹதோவின் பெயரைக் குறிப்பிடாமல் இது குறித்துப் பேசியது:
தங்களுக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளாவும்,ஆதாரமாகவும் இருப்பவர்களை என்கவுன்ட்டர்கள் மூலம் மேற்கு வங்க மாநில அரசு கொன்று வருகிறது. எவ்விதத்திலும் பயனில்லாத இந்த அரசு விரைவில் அதிகாரத்தை இழக்கும்.
மேற்கு மேதினிபூர், புரூலியா உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆயுதப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்குவங்கத்தில் உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல்களில் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.இதனால் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் ஆயுதம் பலம் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் இப்போதே முகாம்களை நடத்துகின்றனர்.தங்களுக்கு வேண்டாதவர்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்குவது இல்லை என்றார் மம்தா.

0 கருத்துகள்: on "என்கவுன்ட்டர் மூலம் ஆதாரங்களை அழிக்கிறது மேற்குவங்க அரசு: மம்தா"
கருத்துரையிடுக