புதுடெல்லி,ஆக9:பீகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக இளம் தலைவர் வருண் காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தின் 2 நாள் தேசிய செயற்குழு புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதன் பின்னர், அக் கட்சித் தலைவர் சரத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்வதை ஐக்கிய ஜனதா தளம் எதிர்க்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "தொகுதிகளைப் பகிர்ந்துக் கொள்வது தொடர்பாக கடந்த பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தவிதமான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதோ அதுவே இந்தத் தேர்தலிலும் தொடரும். பிரசாரம் செய்வது தொடர்பாகவும் பழைய ஏற்பாடே பொருந்தும்" என்றார் அவர்.
2002 கோத்ரா கலவரத்துக்குப் பின்னர், பீகாரில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் முனைப்புடன் உள்ள ஐக்கிய ஜனதா தளம், 2009 மக்களவைத் தேர்தலின்போதும் மோடி பிரசாரத்தில் ஈடுபட கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
நரேந்திர மோடி பிரசாரம் செய்ய வாய்ப்பு இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு செய்தியாளர்கள் வலியுறுத்தினர். "எனது நிலையை நான் தெளிவாகக் கூறிவிட்டேன். எந்தவொரு விஷயத்தையும் கூறுவதற்கு வேறு சிறந்த வழிமுறைகளும் இருக்கலாம்" என்றார் அவர்.
மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுமாறு பேசிய வருண் காந்தி, பீகாரில் பிரசாரம் செய்வது குறித்து கேட்டபோது, "யார் இந்த வருண் காந்தி?" என செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார் யாதவ்.
இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எங்களது கூட்டணி மிகப் பழமையானது. இரு கட்சியினரும் தொடர்ந்து கூட்டாகவே செயல்படுவோம்" என்றார் அவர்.
நிதீஷ் குமாரும் உறுதி: கடந்த தேர்தலைப் போலவே பாஜகவுடன் தொகுதிப் பகிர்வும், பிரசாரமும் அமையும் என தேசிய செயற்குழுவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ள நிவாரணத்துக்கு குஜராத் அரசு கொடுத்த நிதியை திருப்பி அளித்தது சரிதான் எனவும் அக் கூட்டத்தில் நிதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பீகார் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பழங்குடியினருக்கு என தனி நிதி உருவாக்கப்பட்டுள்ளது போல முஸ்லிம்களுக்காகவும் தனி நிதி உருவாக்க ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டு வருகிறது.
அதேபோல, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடும், முஸ்லிம்களிலும், கிறிஸ்தவர்களிலும் உள்ள பின்தங்கியவர்களை எஸ்.சி, எஸ்.டி. என அறிவிக்கவும் பரிந்துரைத்துள்ள ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தவும் அக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நரேந்திர மோடி, வருண் காந்தி பிரசாரத்துக்கு அக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ள நிவாரணத்துக்கு குஜராத் அரசு அளித்த நிதி தொடர்பாக, நிதீஷ் குமாருடன் நரேந்திர மோடி இருப்பது போன்ற படத்துடன் விளம்பரங்கள் பீகாரில் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் அரசு அளித்த நிதியை முதல்வர் நிதீஷ் குமார் திருப்பி அளித்துவிட்டார். நிதீஷ் குமாரின் இந்த செயலால் பாரதிய ஜனதா கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. நிதீஷ் குமார் அப்போது மேற்கொண்ட யாத்திரையில் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுசீல் குமார் மோடி சில நாள்கள் பங்கேற்கவில்லை.
இதையடுத்து,இரு கட்சிகளின் உயர் தலைவர்களும் கலந்து பேசி பிரச்னையை அப்போதைக்கு முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால், அதே பிரச்னை இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "பீகாரில் மோடி,வருண் பிரசாரத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் தடை"
கருத்துரையிடுக