9 ஆக., 2010

சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு: ஆந்திர காவல்துறையின் பங்கு பற்றி ஏன் விசாரிக்கப்படவில்லை?

ஹைதராபாத்,ஆக9:'சொஹ்ராபுதீன் மற்றும் கௌசர் பீவி ஆகியோரின் கொலையில் ஆந்திர காவல்துறையின் பங்கு பற்றி ஏன் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளது. ஹைதராபாத் காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறை மற்றும் இரு மாநிலங்களையும் ஆளும் கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உள்ளது.மக்களுக்கு முன்னால் உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்'என ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட மக்கள் உரிமைகள் குழு மாநிலத்தின் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

"கௌசர் பீவி மற்றும் சொஹ்ராபுதீன் ஆகியோரின் கொலைகளைப் பற்றியும், ஹைதராபாத் காவல்துறையினர் இதில் ஈடுபட்டுள்ளது பற்றியும், ஏனென்றால் இப்படுகொலையில் ஹைதராபாத் காவல்துறையின் பங்கு பெரியளவில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

'கௌசர் பீவி மற்றும் சொஹ்ராபுதீன் கொலையின் சதிவேளைகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்' என்று மக்கள் சுதந்திர கண்காணிப்பு குழு ஆந்திரபிரதேச முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

சொஹ்ராபுதீன் மற்றும் கௌசர் பீவி ஆகியோரின் கொலை ஆந்திரா மற்றும் குஜராத் காவல்துறையினர் மற்றும் இருமாநிலங்களின் அரசியல்வாதிகள் மற்றும் கொலைக் கும்பல்களுக்கிடையே ஒப்பந்தம் போட்டு செய்யப்பட்ட ஒரு படுகொலையாகும்.இக்கொலைக்கான முழு சதித்திட்டமும் ஹைதராபாத்திலேயே தீட்டப்பட்டுள்ளது.

குஜராத் காவல்துறைக்கு தேவையான உதவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டது என மாநில போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார்.

ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர ரெட்டி இருந்து பொழுது அரசியல் தலைவர்கள் மற்றும் ஆந்திர மாநில அரசாங்கத்துக்குத் தெரியாமல் எப்படி இந்த உதவிகள் செய்யப்பட்டது, போக்குவரத்து வசதிகள் என்ற பெயரில் ஆந்திர காவல்துறை கொலைகாரக் கும்பலான குஜராத் காவல்துறையினருக்கு காவல் குழுவின் மூலம் உளவுத்துறையின் சேவைகள் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் சேவைகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.

காவல்துறையின் பல பிரிவுகளையும்,பல துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் குஜராத் காவல்துறையினருடன் பல சந்திப்புகளை நடத்தி கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர்.

போலி எண்களுடன் கூடிய வாகனங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.அந்த வாகனத்தில் நம்போலியில் இருந்து புறப்பட்ட சொஹ்ராபுதீன் மற்றும் அவரது மனைவியும் பயணம் செய்த சங்கீதா டிராவல்ஸின் பேருந்தை பின்தொடர்ந்துள்ளனர்.

போக்குவரத்து உதவிகள் என்ற பெயரில் ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் தண்டோலா என்ற கிராமத்தில் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி பேருந்தை நிறுத்தி அதிலிருந்த சொஹ்ராபுதீன் மற்றும் கௌசர் பீவி ஆகிய இருவரையும் கடத்தியுள்ளனர்.

போலியான ஆந்திர பதிவு எண்ணைக் கொண்ட வாகனத்தில் அவர்களை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்த போலி தாக்குதல் கொலையில் கீதா ஜோரி என்ற IPS அதிகாரியும் குஜராத் CIDயும் விசாரணை செய்துள்ளனர்,இவர் ஹைதராபாத் காவல்துறையினரிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அநேக முறை ஹைதராபாத் சென்றுள்ளார்.

முக்கியமாக கூடுதல் காவல்துறை ஆணையர் ராஜீவ் திரிவேதி மற்றும் உளவுத்துறை, டாஸ்க் போர்ஸ், மற்றும் SIT ஆகியவற்றிற்கு பொறுப்புதாரராக இருந்து குஜராத் காவல்துறையினருக்கு உறுதுணையாக எல்லா உதவிகளையும் செய்த IPS அதிகாரியையும் விசாரணை செய்ய சென்றுள்ளனர்.

மேலும் இக்கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளையும் விசாரணை செய்துள்ளார். கீதா ஜோரி அஹமதாபாத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிப்போர்ட்டில் இக்கொலையில் ஈடுபட்ட 7 ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த ஏழு அதிகாரிகளும் தலைமறைவாக உள்ளதாகவும்,அவருடைய குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் திரிவேதி,ராதாகிருஷ்ணன் மற்றும் LK.சிண்ட்லே ஆகியோர் சாட்சிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் இந்தக் குற்றப்பத்திரிக்கையின் படி தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் மறைந்துள்ள பல உண்மைகளை வெளிக்கொண்டுவர மேலும் முக்கியமாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள ஹைதராபாத் காவல்துறையினரின் பங்கு பற்றி ஏன் விசாரணை செய்யப்படவில்லை என்பதனையும் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரைப் போலவே ஹைதராபாத் காவல்துறையினருக்கும் இப்படுகொலையில் பங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதிலிருந்து குஜராத் மற்றும் ஹைதராபாத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்ற உண்மை வெளிப்படுகிறது.

அரசியல் தலைவர்களின் உத்தரவுப்படி குஜராத் காவல்துறை முஸ்லிம்களை குறிவைத்து வருகிறது.

ஹைதராபாத்தில் முஸ்லிம்களையோ அல்லது எந்த ஒரு அமைப்பையோ நசுக்குவதற்கு காவல்துறை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதித்துள்ளது. தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள் ஆந்திர பிரதேச காவல்துறையினருக்கு முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச அரசு காவல்துறையினரின் குற்றச்செயல்களும் அவர்களின் மீது விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் இருந்து பாதுகாக்கின்றது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப் பின்னரும் ஹைதராபாத் காவல்துறை சிபிஐ அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுப்பது சொஹ்ராபுதீன் கொலைவழக்கில் அவர்களின் பங்கை பெரும்பாலும் மறைக்கும் செயலாக உள்ளது.

2007 ஆம் ஆண்டு ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி இந்த விசாரணை முழுவதையும் மறுத்து இவையணைத்தும் அர்த்தமற்ற குப்பை என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ஜனா ரெட்டி கடந்த சில வருடங்களாக நடந்த நிகழ்ச்சிகள் எதுவும் எனக்கு ஞாபகமில்லை எனக்கூறி வருகிறார்.

ஹைதராபாத் காவல்துறையின் மூலம் செய்யப்பட்ட உதவிகள் 'லாஜிஸ்டிக்' உதவிகள் எனக் கமிஷனர் கூறுகிறார்.

மற்றொரு புறம் ஆந்திர காவல்துறை ஏன் விசாரிக்கப்படவில்லை என செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு வழக்குகள் தொடந்து வருகிறது. மேற்கூறியவைகள் மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு தவறை மறுக்கிறது. காங்கிரஸ் அரசு உண்மைகளையும் கொலைக் குற்றவாளிகளையும் மறைக்கிறது.

போலி என்கவுண்டர் மற்றும் வாழும் உரிமையை மறுப்பதிலும் காங்கிரஸ் இரட்டைநிலை காண்பிக்கிறது.

ஆந்திர அரசின் இந்த அமைதி நிலை சுதந்திரமான நீதி விசாரணை நடக்குமா என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்விஷயத்தில் முதலமைச்சர் எந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பதை மக்கள் அறிய ஆர்வமாகி உள்ளனர்.

'முதலமைச்சர் இவ்விஷயத்தில் மனித இனத்திற்கு எதிரான குற்றச்செயலில் நியாயமான முடிவை எடுக்கவேண்டும் என இந்நாட்டின் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். மனிதநேய அடிப்படையில் முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு,குற்றம் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதனால் சாட்சிகளை அழிப்பதற்கு அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்யமாட்டார்கள்.இது உங்கள் அரசின் கடமை, உண்மையை மக்களுக்கு முன் எடுத்துக்கூறவேண்டும்.சிபிஐயின் விசாரணை மூலம் கொலைக்கார போலீஸ் கும்பல்களின் மீது நடவடிக்கை ஒத்துழைக்க வேண்டும்.' இவ்வாறு மக்கள் உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு: ஆந்திர காவல்துறையின் பங்கு பற்றி ஏன் விசாரிக்கப்படவில்லை?"

கருத்துரையிடுக