11 ஆக., 2010

அமெரிக்கா பாதுகாப்பு செலவை குறைக்கின்றது

வாஷிங்டன்,ஆக11:பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் அமெரிக்கா, தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதற்காக ராணுவ கமாண்டுகளில் ஒன்றை நீக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த கமாண்டர்களின் செயல்பாடுகளை நிறுத்திவைப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலர் ரோபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் பட்ஜெட்டில் 10000 கோடி டாலர் குறைப்பதுதான் நோக்கமாகும். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகுதான் ராணுவத்துறையில் செலவு அதிகரித்தது.

வெர்ஜீனியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒருங்கிணைந்த கமாண்டில் 5000 பேர் உள்ளனர். இவர்களின் செயல்பாடு முற்றிலும் நீக்கப்படும். ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களின் 50 பதவிகளை நீக்க சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.

காண்ட்ராக்டர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் குறைக்கப்படும். அமெரிக்க பாதுகாப்புத்துறை இவ்வாண்டு 70 ஆயிரம் கோடி டாலரை செலவிற்காக ஒதுக்கிவைத்துள்ளது. உலகத்தில் பிற நாடுகளின் ஒதுக்கீட்டைவிட இது அதிகமாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்கா பாதுகாப்பு செலவை குறைக்கின்றது"

கருத்துரையிடுக