12 ஆக., 2010

டிட்கோவுடன் கை கோர்க்கிறது இடிஏ ஸ்டார்

சென்னை,ஆக12:இடிஏ அஸ்கான் குழுமத்தைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனம், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், டிட்கோவுடன் இணைந்து குளோப்வில் என்ற மிகப் பெரிய குடியிருப்பு வளாகத்தை தமிழகத்தில் உருவாக்குகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் இந்த பிரமாண்ட நகரியம் அமைகிறது. 350க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இங்கு வீடுகள் கட்டப்படவுள்ளன.சிப்காட் வளாகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இது அமைகிறது.

குளோப்வில் தொடக்க விழாவில் பேசிய இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகமது ஷாகீர் பேசுகையில், இங்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு வீட்டு வசதி கிடைக்கும். தமிழகத்தின் தொழில் பிராந்தியத்தின் இதயப் பகுதியில் வீடு அமைவதால் மிகப் பெரிய அளவில் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இந்தத் திட்டம் ரூ.600 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதில் 80 சதவீதத் தொகை குடியிருப்புகளுக்கும், 20 சதவீதத் தொகை வணிக வளாகங்களுக்கும் செலவிடப்படும்.

முதல் கட்டமாக 82 ஏக்கர் பரப்பளவில் வீடுகள் கட்டப்படவுள்ளன. ரூ. 120 கோடி இதற்கு ஒதுக்கப்படுகிறது. 18 முதல் 24 மாதங்களில் இது முடிவடையும். முழு அளவிலான திட்டம் ஐந்து ஆண்டுகளில் முடிவடையும்.

முதல் கட்டத்தில் 2000 குடியிருப்புகள் அமையும். அவை முறையே ஒன்று, 2, மூன்று பெட்ரூம் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக இருக்கும். 595 சதுர அடி முதல் 1196 சதுர அடி கொண்டவையாக இது இருக்கும். இவை தவிர மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வர்த்தக கட்டடங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவையும் கட்டப்படவுள்ளது என்றார்.

இங்கு கட்டப்படும் வீடுகளுக்கு சதுர அடிக்கு ரூ.2,200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டிட்கோவுடன் கை கோர்க்கிறது இடிஏ ஸ்டார்"

கருத்துரையிடுக