இஸ்லாமாபாத்,ஆக20:சுயநிர்ணய உரிமைக் கிடைப்பதற்காக கஷ்மீரிகள்
உறுதிப் பூண்டுள்ளார்கள். இந்தியா அங்குள்ள உண்மையான நிலையை உணர்ந்துக் கொள்ள தயாராகவேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
எந்தத் தியாகமும் செய்தும், கஷ்மீரிகள் அவர்களுடைய உரிமையை
பெறுவார்கள் என்று நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கஷ்மீரிகளின்
லட்சியத்திலிருந்து அவர்களை தடுக்க இயலாது என்றும், பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித்
பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்களை இந்திய ராணுவம் கொடூரமான முறையில் எதிர்க்கிறது. சட்டரீதியான போராட்டத்தை அடக்கி ஒடுக்குகிறது இந்தியா.
கஷ்மீர் விவகாரத்தில் கஷ்மீர் இளைஞர்கள் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிக்கை கவனத்திற்கு கொண்டுவந்த பொழுதுதான் அப்துல் பாஸித் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும் அவர்,"கஷ்மீரிகள் தங்களது உரிமைகளை வென்றெடுக்கும்
போராட்டத்திற்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருக்கும். கஷ்மீரில் நடக்கும் போராட்டத்திற்கு பின்னணியில் பாகிஸ்தான் செயல்படுவதாக இந்தியா குற்றஞ்சாட்டுவதை மறுத்தார்.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவதற்கு நிபந்தனைகள் தேவையில்லை எனவும் அப்துல் பாஸித் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:உண்மையை உணர்ந்துக் கொள்ள இந்தியா தயாராக வேண்டும்- பாகிஸ்தான்"
கருத்துரையிடுக