பெய்ரூட்,ஆக6:இரு நாடுகளுக்கிடையேயான மோதல் நிலவும் சூழலில் இஸ்ரேல் விமானம் நேற்று லெபனானின் வான் எல்லையை அத்துமீறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இஸ்ரேலின் கண்காணிப்பு விமானம் தெற்கு லெபனானின் கஃபர் கிலா கிராமத்தின் மேல் பறந்ததாக லெபனான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த புதன் கிழமையும் லெபனானின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய விமானம் இரண்டு மணி நேரம் கஃபர் கிலா கிராமத்தில் வட்டமிட்டுள்ளது.
அதீஸாவில் லெபனானின் ராணுவ போஸ்ட் மீது தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலுக்கு கிடைத்த பதிலடியில் அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
லெபனான் ராணுவத்திற்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் பரிபூரண ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் விமானம் மீண்டும் லெபனான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது"
கருத்துரையிடுக