
10 மாவட்டங்களில் கூடுதலான பாதுகாப்புப் படைகள் களமிறங்கி ஊரடங்கு உத்தரவை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, நேற்று முன் தினம் ஹாபகட்டலில் பாதுகாப்புப் படையுடன் நடந்த மோதலில் குண்டடிப்பட்ட ஒருவர் குலாம்நபி பித்தாரி(வயது 45) என்பவர் மரணமடைந்தார். சோப்போரிலும், ஹாபகட்டலிலும் போராட்டக்காரர்கள் போலீஸ் போஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பாராமுல்லாவில் மாநில போக்குவரத்து கார்ப்பரேசனின் அலுவலகத்தை தீயிட்டுக் கொளுத்தியதாகவும் போலீஸ் கூறுகிறது.
கஷ்மீரில் பொதுமக்கள் அமைதிக்காக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், ஹுரியத் தலைவர் செய்யத் அலிஷா கீலானியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, அத்தியாவசியப் பொருட்களும், மருந்துகளும் விநியோகம் செய்ய தொடர்புடைய துறைகளுக்கு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய பொருட்களுடன் ட்ரக்குகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதற்கு இதுத்தொடர்பான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிறகு உமர் அப்துல்லா உத்தரவிட்டார்.
எல்லா தினங்களிலும் மாலை நேரங்களில் பொருட்கள் விநியோகிக்கப்படும். அத்தியாவசியமான மருந்துகள் மருத்துவமனைகளில் விமானம் மூலம் அனுப்பப்படும். அரசுத்துறைகளின் பணிகளை சுமூகமாக்க எல்லா தலைமைச் செயலக பணியாளர்களுக்கும் உடனடியாக பணிக்கு திரும்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ஆகியோர் கஷ்மீர் பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து கஷ்மீர் நிலைமைகள் குறித்து விவாதித்தனர்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தலையிடவேண்டுமென்றும், கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் அரசியல் தீர்வுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது: மேலும் ஒருவர் மரணம்"
கருத்துரையிடுக