5 ஆக., 2010

ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கியதால் பாஜக வலுவிழந்துவிட்டது: அசோக் சிங்கால்

போபால்,ஆக5:ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கியதால் பாஜக வலுவிழந்துவிட்டது என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.

இதுகுறித்து போபாலில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் கூறியதாவது:
"அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வரவுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் குழப்பத்தையே விளைவிக்கும்.சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது அதிருப்தியளிக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம். நீதிமன்றத்தால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. இந்த பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதுதான்.

ராமர் கோயில் பிரச்னையை பாஜக, அரசியலாக்கியதால் அந்தக் கட்சி வலுவிழந்துவிட்டது. இந்த விவகாரத்தால் கட்சி மட்டுமல்லாமல் ராமர் கோயில் பிரச்னையும் வலுவிழந்துவிட்டது. இதனால் மக்களும் பாஜகவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கையில் ஹிந்துக்கள் ஈடுபடுவதாக நாட்டில் குற்றம் சாட்டப்படுகிறது. இது சரியல்ல. பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது" என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கியதால் பாஜக வலுவிழந்துவிட்டது: அசோக் சிங்கால்"

கருத்துரையிடுக