5 ஆக., 2010

ஈரான் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்குத் தடை

வாஷிங்டன்,ஆக5:ஈரானுடன் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அணு ஆற்றல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் நாட்டு மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் இதை பற்றி கவலைப்படாத ஈரான், பல்வேறு வழிகளில் தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி பி.ஜெ.க்ரோலே குறிப்பிடுகையில், "பெலாரஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் 21 நிறுவனங்கள் ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகின்றன. இதையடுத்து இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை ஈரான் மக்களுக்கு எதிரானதல்ல" என்றார்.

தற்போது விதிக்கப்பட்ட தடை ஈரானிய மக்களை பொருளாதார அடிப்படையில் பாதிக்காது என்பது அமெரிக்க வாதம். மேலும் ஹெசபொல்லா மற்றும் ஃபலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவுகிறது. அத்துடன் அணு ஆற்றல் தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறதென்பதால், இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அவைகளை முடக்க இத்தடை உதவும் என்று கூறப்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரான் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்குத் தடை"

கருத்துரையிடுக