19 ஆக., 2010

போலி என்கவுண்டர் விசாரணையிலிருந்து மோடியை காப்பாற்ற அணுவிபத்து காப்பீட்டு மசோதாவுக்கு பாஜக ஆதரவு

ஆக19:காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதாவை ஆதரிக்க பாஜக முன்வந்துள்ளது என்று இடதுசாரி கட்சிகள், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புகார் தெரிவித்தன.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.
அணு மசோதாவுக்கு பாஜக ஆதரவு அளித்ததற்கு பிரதிபலனாக, குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து முதல்வர் நரேந்திர மோடியை காப்பாற்ற காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை இரு அவைகளிலும் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த பாஜக இப்போது ஆதரிக்க முன்வந்துள்ளது. இதை பாஜக தவிர்த்த எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

சொராஹ்புதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுப்பதற்காகவே அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதாவை ஆதரிக்க பாஜக முன்வந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கும் போது; "சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை குற்றமற்றவராக காட்ட பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படுவதால் பாஜக அணுவிபத்து காப்பீட்டு மசோதாவை ஆதரிக்க முன்வந்துள்ளது" என்றார்.

இதனால் நரேந்திரமோடி குற்றமற்றவர் என்ற சான்று எளிதாக கிடைத்துவிடும் என்றார் அவர்.

இதற்காக மேலும் விலை உயர்வுப் பிரச்னையை எழுப்பப் கூடாது என்றும் பாஜகவுக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போலி என்கவுண்டர் விசாரணையிலிருந்து மோடியை காப்பாற்ற அணுவிபத்து காப்பீட்டு மசோதாவுக்கு பாஜக ஆதரவு"

கருத்துரையிடுக