19 ஆக., 2010

போலீஸ் காவலில் மஃதனி: ரகசிய இடத்தில் விசாரணை

ஆக19:பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமான நிலையத்தில் இருந்து கிங்பிஷர் விமானம் மூலம் பெங்களூக்கு அழைத்துவந்தனர்.

அந்த விமானம் இரவு 9.50 மணிக்கு பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அறையில் மஃதனியை சிறிது நேரம் வைத்திருந்தனர். வெளியே பத்திரிகையாளர்கள் கூட்டம், விடியோ கேரமிரா மேன்கள் கூட்டம் அதிகமிருந்ததால், விமான நிலையத்துக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படும் வழியாக மஃதனியை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

மஃதனியை போலீஸார் நேராக பெஙகளூர் முதலாவது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்ட மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பி.ஹுல்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். கோரமங்களா தேசிய விளையாட்டு கிராமத்தில் நீதிபதி வீடு உள்ளது. போலீஸார் மாஜிஸ்திரேட் வீட்டுக்குச் சென்றபோது இரவு 11 மணியாகிவிட்டது.

மாஜிஸ்திரேட் வீட்டின் முதல் மாடியில் இருந்தார். மஃதனியால் மாடிப்படி ஏற முடியாது என்று கூறி அவரை காரில்யே வைத்திருந்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் கீழே இறங்கிவந்து ம;தனியிடம் பேசினார். பிறகு போலீஸ் தரப்பில் அவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் மஃதனியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் மஃதனியை ஆகஸ்ட் 26-ம் தேதிவரை போலீஸ் காவிலில் வைத்து உத்தரவிட்டார். மேலும் காவலில் இருக்கும்போது அவர் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதன்பிறகு மஃதனியை போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர். புதன்கிழமை காலை போலீஸார் அவரிடம் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போலீஸ் காவலில் மஃதனி: ரகசிய இடத்தில் விசாரணை"

கருத்துரையிடுக