6 ஆக., 2010

வரதட்சணை கேட்பது குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி,ஆக6:வரதட்சணை கேட்பது குற்றமல்ல என்றும் அது கிடைக்காதபட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினால் மட்டுமே குற்றமாகும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவரது மனைவி பெயர் சந்தோஷ். இவர் கடந்த 93ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அமர்சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் குற்றவாளிகள் என கீழ் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் வழக்கை விசாரித்த ஐகோர்ட், அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரரை விடுதலை செய்தது.அமர்சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரர் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமர்சிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுவில், "மனைவி வீட்டாரிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு கேட்டது உண்மைதான். அவர்கள் வாங்கித் தரவில்லை. அதற்காக என் மனைவியை நான் எந்தவகையிலும் வற்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ இல்லை" என்று அமர்சிங் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர், "அமர்சிங் ஸ்கூட்டர் கேட்ட விஷயம் இரண்டு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக அவர் மனைவியை கொடுமைப்படுத்தினார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால்தான் குற்றமாகும். இந்த கொடுமையின் காரணமாக மனைவி இறந்தால் அது தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதனால், அமர்சிங்கை விடுதலை செய்கிறோம்" என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என வரதட்சணை எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்து வரும் வேளையில் வெறுமனே வரதட்சணை கேட்பது குற்றமாகாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரதட்சணை கேட்பது குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு"

கருத்துரையிடுக