ரியாத்,ஆக19:சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம். இவ்வமைப்பு சார்பாக ஆண்டுதோறும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் இஃப்தார் நிகழ்ச்சி சவூதி தலைநகர் ரியாதில் அமைந்துள்ள அல் உபைதா இஸ்திராஹாவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.
மஃரிப் தொழுகைக்கு மும்பையைச் சார்ந்த அபூதாஹிர் தலைமை வகித்தார். ஃபெடர்னிடி ஃபாரம் ஆற்றிய சேவைகளின் கண்காட்சியும் தொடர்ந்து நடந்தது. ஜலாலுத்தீன் கண்ணூர், கோயா ஃபாரூக், இல்லியாஸ் திரூர், ஸலீம் மெளலவி, ஜுனைத் சென்னை, ஃபயாஸ் தமிழ்நாடு, ஜாவேத் ஆந்திரா, பஷீர், மஜீத் கர்நாடகா, செய்யத் அலி மேற்குவங்காளம், செய்யத் மன்சூர் மும்பை ஆகியோர் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய இஃப்தார் சங்கமம்"
கருத்துரையிடுக