டெல்அவீவ்,ஆக19:இஸ்ரேலின் டெல் அவீவிலிலுள்ள துருக்கி தூதரகத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஃபலஸ்தீன் ஒருவர் கைதுச் செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இவரை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர்தான் இவரை சுட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இரண்டுபேரை பிணைக் கைதியாக பிடித்தார் என்றும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
2006 ஆம் ஆண்டு டெல் அவீவில் பிரிட்டீஷ் தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த ஃபலஸ்தீனைச் சார்ந்த நதீம் இன்ஜாஸ்தான் அவர் என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அபயம் தேடி தூதரகத்தில் நுழைந்த ஃபலஸ்தீனி என அழைக்கபடும் நபர்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு கூறியுள்ளார். ஆனால், இச்சம்பவத்தைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
தாக்குதல் நடத்த வந்தவர் என்று கூறப்படும் நபரிடம் ஒரு கத்தியும், ஒரு பெட்ரோல் கேனும், ஒரு விளையாட்டுத் துப்பாக்கியும் இருந்ததாக தாவுதோக்லு தெரிவிக்கிறார்.
தூதரக ஜெனரலையும்,அவருடைய மனைவியையும் அந்நபர் பிணைக் கைதிகளாக பிடித்தார் எனக் கூறப்படுகிறது. தூதரக கட்டிடத்தை தகர்ப்பேன் என்று அவர் மிரட்டியதாக இஸ்ரேலின் சேனல் 2 கூறுகிறது. அதேவேளையில், இச்சம்பவம் மர்மங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த நபர் துப்பாக்கியால் சுட்டார் என இஸ்ரேலின் ஆரம்ப அறிக்கைகளில் கூறப்பட்டது. ஆனால், அவருடைய கையிலிருந்தது விளையாட்டுத் துப்பாக்கி என பின்னர் தெரியவந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு பிரிட்டீஷ் தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த இன்ஜாஸ் இது போன்றதொரு நாடகம் நடத்தியிருந்தார். பிரிட்டனில் புகலிடம் தராவிட்டால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைச் செய்யப்போவதாக மிரட்டியிருந்தார். ஆனால், அச்சம்பவத்தின் பெயரில் அவருக்கு தண்டனையொன்றும் வழங்கப்படவில்லை. இஸ்ரேலி போலீஸின் ஒற்றர் என்று தெரியவந்ததால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
காஸ்ஸாவிற்கு வந்த துருக்கி நிவாரணக் கப்பலை இஸ்ரேல் அநியாயமாக தாக்கியதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கும் அதற்கு தொடர்புண்டா? என்பதுக் குறித்தும் துருக்கி விசாரித்து வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலில் துருக்கி தூதரகத்தில் நடந்த மர்மமான பிணைக்கைதி நாடகம்"
கருத்துரையிடுக