19 ஆக., 2010

சுதந்திர தேவி சிலையை முறியடிக்க ப்ரூஸ்லி சிலை

பீஜிங்,ஆக19:ஒரு நாட்டின் சின்னமாக மாறிய சுதந்திரதேவி சிலையை முறியடிக்கும் விதத்தில் அதற்கு சமமான ப்ரூஸ் லி சிலை சீனாவில் உருவாகி வருகிறது.

காங்டோங் மாகாணத்தில் ஃபோஷனில் 30 மீட்டர் உயரமுள்ள ப்ரூஸ் லி சிலை களிமண்ணில் தயாராகிறது. அதற்கு சிவப்பு வர்ணம் பூசப்படுகிறது. தற்காப்புக் கலையில் உலகப்புகழ் பெற்ற ப்ரூஸ் லி சீன-அமெரிக்க நடிகராவார்.

ப்ரூஸ் லியின் சிலை அவருடைய மாஸ்டர் பீஸாவை ஹை கிக் செய்யும் விதத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. எட்டுக் கால்களைக் கொண்ட ப்ரூஸ் லீ சிலையின் பெயர் ’லீ ஸியாலோங்’ என்பதாகும்.

ப்ரூஸ் லீ சிலையின் ஒவ்வொரு பாதங்களிலும் ஒவ்வொரு உலகப்புகழ் பெற்ற நினைவுச் சின்னங்கள் நிர்மாணிக்கப்படும். பாரிஸின் ஆர்க் டி ட்ரயம்ப், ஷாங்காயின் ஒரியண்டல் ப்யர்ல் டவர், பேர்ட்ஸ் நெஸ்ட் உள்ளிட்டவைகளும் அந்த நினைவுச் சின்னங்களில் அடங்கும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதந்திர தேவி சிலையை முறியடிக்க ப்ரூஸ்லி சிலை"

கருத்துரையிடுக