பெய்ரூட்,ஆக19:இஸ்ரேலுக்காக உளவுவேலை மேற்கொண்ட இரண்டு பேருக்கு லெபனானின் ராணுவ நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது.
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாதிற்காக உளவுவேலைப் பார்த்ததாக உஸாமா முஹம்மத் அலி பெர்ரி, அன்டோயின் ஸாலி ஆத்மெ ஆகியோர் குற்றஞ் சாட்ட்டப்பட்டுள்ளது.
லெபனானை தாக்குவதற்கு தேவையான தகவல்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக அலி பெர்ரிக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆத்மெ என்பவர் இஸ்ரேல் அதிகாரிகளுடன் லெப்னானில் அத்துமீறி நுழைந்ததற்கும் பெர்ரியுடன் இணைந்து இஸ்ரேலுக்கு உதவியதற்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரை இதுவரை கைதுச் செய்யமுடியவில்லை.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏறத்தாழ 100 பேரை உளவு வேலை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் போலீஸ் கைதுச் செய்துள்ளது. இவர்களில் ஐந்து பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலுக்காக உளவு வேலை: லெபனானில் இரண்டுபேருக்கு மரணத் தண்டனை"
கருத்துரையிடுக