19 ஆக., 2010

ஆயுதச் சட்டத்தில் திருத்தம்- திக்விஜய்சிங் எதிர்ப்பு

புதுடெல்லி,ஆக19:மாவோயிஸ்ட் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை வெளிப்படையாக விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங்.

தற்பொழுது ஆயுதச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதற்கும் உள்துறை அமைச்சகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆயுதம் வைத்துக் கொள்ளும் சாதாரண குடிமக்களின் உரிமையை பாதிக்கும் விதத்தில் ஆயுதச்சட்ட திருத்தம் அமைந்துள்ளதாக திக் விஜய் சிங் தலைமையில் பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மனு அளித்துள்ளனர்.

நேசனல் அசோசியேசன்ஸ் ஃபார் கன்ரைட்ஸின் முக்கிய பாதுகாவலர் திக் விஜய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்வந்த் சிங், எஸ்.எஸ்.அலுவாலியா, ஷானவாஸ் ஹுசைன்(பா.ஜ.க), ப்ரிஞ்பூஷன் சரண்சிங்(எஸ்.பி), நவீன் ஜிந்தால், அனில் லாத், சஞ்சய்சிங், ஃப்ரான்ஸிஸ்கோ ஸர்தீத்தா, மனீஷ் திவாரி, ராகேஷ்சிங்(காங்கிரஸ்) ஆகியோர் திக்விஜய் சிங் தலைமையில் பிரதமரை சந்தித்தனர்.

ஆயுதம் வைத்துக்கொள்வதற்கு போலீஸ் வெரிஃபிகேசன் நிர்பந்தமாக்கியும் இதர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நிரூபிப்பது துப்பாக்கியை பாதுகாக்கும் நபரின் பொறுப்பு என்று சட்டத்திருத்தத்தில் கூறப்படுவது சாதாரணமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகும் என பிரதமரை சந்தித்த எம்.பிக்கள் குழு குற்றஞ்சாட்டியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆயுதச் சட்டத்தில் திருத்தம்- திக்விஜய்சிங் எதிர்ப்பு"

கருத்துரையிடுக