8 ஆக., 2010

க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜித் விவாதம்: ஃபரீத் ஸக்கரியா விருதை திரும்பக் கொடுத்தார்

வாஷிங்டன்,ஆக8:உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த க்ரவுண்ட் ஸீரோவில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த யூத அமைப்பின் நடவடிக்கையை கண்டித்து 'நியூஸ் வீக்' வார இதழின் ஆசிரியரும், இந்தியா வம்சாவழியைச் சார்ந்தவருமான ஃபரீத் ஸக்கரியா ஆண்டி டிஃபமேஷன் லீக் என்ற அமைப்பு வழங்கிய விருதை திரும்பக் கொடுத்தார்.

2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விருதாகும் இது. விருதை திரும்ப அளிக்க தீர்மானித்த ஸக்கரியா, அவ்வமைப்பிற்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு விருந்து அளித்தது மிக்க மகிழ்ச்சி என்றாலும்,மஸ்ஜிதை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நடவடிக்கை எனது மனசாட்சியை திருப்திப்படுத்தவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

விருதை திரும்பக் கொடுத்த ஸக்கரியா, யூத அமைப்பிடம் தீர்மானத்தை வாபஸ் பெறும்படி கோரியுள்ளார். செப்டம்பர் 11 சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களில் சிலரும்,சில அரசியல் தலைவர்களும்தான் மஸ்ஜித் நிர்மாணிப்பதை எதிர்க்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்புதான் மஸ்ஜித் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு யூத அமைப்புகள் எதிர்க்கத் துவங்கியுள்ளன.

10 கோடி டாலர் செலவில் கட்டப்படும் மஸ்ஜிதுக்கு பணம் அளிப்பது குவைத் வம்சாவழியைச் சார்ந்த இமாம் ஃபைஸல் அப்துல் ரவூஃப் ஆவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜித் விவாதம்: ஃபரீத் ஸக்கரியா விருதை திரும்பக் கொடுத்தார்"

கருத்துரையிடுக