6 ஆக., 2010

சிவப்பு மதமும், சில அரசியல் புலம்பல்களும்

(மனித உரிமை ஆர்வலரான டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

கம்யூனிசத்தை சிவப்பு மதம் என்ற புத்தகத்தை எழுதி மார்க்சிஸம் ஒரு கொள்கையல்ல என்பதை காலம் கடந்தாலும் கூட அதனை புரிந்து கொண்டுள்ளார், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான சி.ஐ.டி.யு வில் 33 ஆண்டுகாலம் பணியாற்றிய பி.கேசவன் நாயர் என்பவர்.

Beyond Red என்ற புத்தகத்தில் கம்யூனிஸ்ட் மதம் மனிதனை மயக்கி அழிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது காரல் மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்திலேயே கண்டறிந்த ஒன்றாகும். என்னவெனினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு இதனை காணாமல்போனது இப்புத்தகம் மற்றும் அதனை எழுதியவருக்கும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

கம்யூனிஸ மதத்தை ஸ்தாபித்து இந்தியாவை கம்யூனிச நாடாக்க முயல்பவரகளல்லவா? இங்குள்ள கம்யூனிஸ்ட்கள். கடந்த அறுபது வருட காலம் அதற்காக முயன்றும் அவர்களால் அதற்கு இயலவில்லை. மூன்று மாநிலங்களில் மட்டுமே உள்ள கம்யூனிஸ்ட்களின் மதச்சபையிலிருந்து அதன் பக்தர்கள் பலரும் வெளியேறிக் கொண்டுள்ளார்கள்.

சிவப்பு மதத்தை கை கழுகக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காலக்கட்டத்தில்தான் 20 வருடங்களில் கேரள மாநிலத்தை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் முயல்வதாக கேரள கம்யூனிச முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அறிக்கை வெளியிடுகிறார்.

கம்யூனிஸ்ட் மதம் தோல்வியடைந்துவிட்டது, மனிதனை மயக்கும் மதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் வி.எஸ்.அச்சுதானந்தன். மதம் அடக்கி ஒடுக்கப்படுபவனின் பெருமூச்சாகும் என்றுக்கூறிய மார்க்ஸை அச்சுதானந்தனுக்கு தெரியாது போலும். இவர்கள்தான் இப்பொழுது ஹிந்துராஷ்ட்ர வாதத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் மத சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியை கிளறிவிடுகிறார்கள்.

இன்றைய பாகிஸ்தானும், பங்க்ளாதேஷும் இந்தியாவின் ஒரு பகுதியாக அல்லவா இருந்தது. அவைகள் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்தபொழுதுதானே அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இத்தகையதொரு மக்கள் கூட்டத்தை இஸ்லாத்தின் பால் ஈர்த்த காரணிகள் என்ன? கம்யூனிச மேலங்கி அணிந்து புரட்சி நாடகத்துடன் வந்த மேல்ஜாதி-தல்லார்-அதிகார வர்க்கத்தின் பரம்பரையில் வந்தவர்கள் தான் அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு சமூகத்தை ‘நீங்கள் எங்களை முஸ்லிமாக்கினீர்கள்’ என்று கூறவைத்தார்கள்.

டாக்டர்.அம்பேத்கர் கூறும் உண்மையும் இதுதான். "கம்யூனிஸ்ட் கட்சி டாங்கேயை போன்ற சில பிராமண இளைஞர்களின் கைகளில் உள்ளது. மராட்டியர்களையும், அட்டவணைப்படுத்த ஜாதியினரையும் வசப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். ஆனால் அவர்களால், மஹாராஷ்ட்ராவில் முன்னேற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் பிராமண இளைஞர்களாவர். அவர்களின் கரங்களில் கம்யூனிசத்தை ஒப்படைத்த ரஷ்யக்காரர்கள் ஒரு மாபெரும் தவறை செய்துள்ளார்கள்." (அம்பேத்கரின் எழுத்துக்கள், வால்யூம் 17, பாகம் 1, பக்கம் 423-424)

இந்தியாவின் மேற்கு பாகத்தை துண்டாடியவர்கள், கிழக்கு பாகத்தை வெட்டியெறிந்தது ஏன்? இந்த இரண்டு நாடுகளிலும் வாழும் குடிமக்களைக் கொண்ட இந்தியா பிளவுபடாமலிருந்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வலு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கும். அதனால்தான், முஸ்லிம்களுக்கு அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜின்னாவை தேசத்துரோகிகள் என்றார்கள், இந்தியாவை துண்டாடினார்கள். (தற்பொழுது ஜின்னா மீண்டும் தேசப்பற்றாளராக மாறியிருக்கிறார்).

பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் வாழ்ந்து வருபவர்கள்தான் இங்குள்ள முஸ்லிம்கள். அவர்கள் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களை ஒடுக்கிவிட்டு இஸ்லாமிய தேசத்தை நிறுவுவார்கள் என்பது வரலாற்றில் அறிவுள்ளவர்களுக்கு நம்ப இயலாத ஒன்றாகும். இந்தியாவை மீண்டும் துண்டாடி அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடலாம் என்ற கனவு பலிக்காது.

இந்தியா புத்த நாடாகயிருந்தது. உலகத்தில் முதன்முதலில் கட்டமைப்புடன் கூடிய மதமாகவும் புத்தமதம் மாறியது. ஆசியாவுக்கு மட்டுமல்ல, புத்தர் உலகத்திற்கே வெளிச்சமாகயிருந்தார். பின்னர் வந்த கிறிஸ்தவமும், இஸ்லாமும் உலக முழுமைக்கும் ஒளியையும், விடுதலையையும் பெற்றுத்தந்த மதங்களாக மாறின.

இந்தியாவில் புத்தமதத்தை தகர்த்தவர்கள் இன்றைய வர்ணாசிரம சக்திகளின் மூதாதையர்களாவர். அவர்கள் இன்றும் பாசிசம் என்ற நஞ்சை ஊட்டி வருகின்றார்கள். ராமாயாணத்தில் அவர்கள் புத்தரை திருடன் என்று அழைக்கின்றார்கள். இத்தகைய புத்தர் அவமதிப்பின் தொடர்ச்சியாகத்தான் இறைத்தூதரை அவமதிப்பதும் தொடர்கிறது.

டாக்டர்.அம்பேத்கர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டார். அத்தகையதொரு புத்தமத நாடாக இந்தியா மாறவேண்டும் என்பது புத்த மதத்தவர்களின் விருப்பமாகும். புத்தமதத்தை தகர்த்து அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு விடுதலையை சாத்தியமாக்கியது இஸ்லாமும், கிறிஸ்தவமும். அதனால்தான் இந்த மதங்கள் இந்தியாவில் பாசிஸ்டுகளின் மிரட்டலை சந்திக்கின்றன.

எந்த மதத்தையும் நம்பிக்கைக்கொள்ளவும், எந்த மதத்தையும் பிரச்சாரம் செய்யவும் அரசியல் சட்டம் சுதந்திரம் வழங்குகிறது. அந்த அர்த்தத்தில் இந்தியா இஸ்லாமிய நாடும், கிறிஸ்தவ நாடும், புத்தநாடுமாகும். இதுதான் இந்தியாவை மதசார்பற்ற நாடாக மாற்றுகிறது.

மதமாற்றத் தடைச்சட்டம் யாருடைய கோரிக்கை? சிவப்பு மத அரசியல்(கம்யூனிஸ்ட்) தடைக்கு முயன்றவர்கள் யார்? தோழர்களை சுட்டுக்கொன்று சிவப்பு மதத்தை பார்சல் செய்ய உத்தரவிட்டது யார்?அவர்கள் தான் இந்தியாவில் மத சிறுபான்மையினரை, இந்நாட்டின் குடிமகன்களை வேட்டையாடி வருகின்றனர்.

ஜமாஅத்தே இஸ்லாமிக்கெதிராக குற்றச்சாட்டு எழுந்தபொழுதும், பி.டி.பிக்கெதிராக வாள் உயர்த்தப்படும் பொழுதும், தற்பொழுது பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக செயல்படும் பொழுதும் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். இவர்களில் ஒருவர் மற்றவரை மதத் தீவிரவாதிகளாக்கி தங்களை மதசார்பற்றவர்களா காட்டிக்கொள்ள முயல்வது அபத்தமாகும். கண்டனத்திற்குரியதாகும். வரலாறு தரும் பாடங்களுக்கு எதிரானதாகும்.

கம்யூனிசம் என்ற சிவப்பு மதம் இந்தியாவில் இடமில்லை என்ற உண்மையை சாட்டர்ஜிகள் வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள். கம்யூனிஸம் இந்தியாவிற்கு 'irrelevant'(பொருத்தமற்றது) என்று 40 ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவைப்புரிந்த சோம்நாத் சாட்டர்ஜி கூறுகிறார். சாட்டர்ஜிக்கு கட்சி ‘irrelevant' ஆனபொழுது கேரளாவில் கட்சிக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் 'irrelevant' ஆக மாறியுள்ளார்.

1930 களில் ஒத்துழையாமை இயக்கம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் உருவான கிறிஸ்தவ-முஸ்லிம்-ஈழவர்(தாழ்த்தப்பட்டவர்கள்) ஐக்கிய முன்னணியை தகர்ப்பதற்கு கோயில் பிரவேசம் என்ற ஆயுதத்தை உபயோகித்தார்கள். அதே ஆயுதத்தை இன்று கம்யூனிஸ்டுகள் உபயோகிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

ஒத்துழையாமை இயக்கத்தின் நாயகனாக கருதப்பட்ட சி.கேசவனை(எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர்) சிறையிலடைத்த சித்திரைத் திருநாள் என்ற ஆட்சியாளர் அவரை தேசத்துரோகி என்ற முத்திரையை குத்தினர். ஈழவர் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மதமாற்றத்திற்கு தயாரானார்கள்.

சி.வி.குஞ்சுராமன் என்பவர் மாராமன் என்ற இடத்தில் நடந்த கன்வென்சனில் பங்கேற்று திருவிதாங்கூரில் எட்டுலட்சம் ஈழவர் என்றழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவப்போவதாக பிரகனம் செய்தார். திருவிதாங்கூர் கிறிஸ்தவ நாடாகப்போகிறது என்றா அந்த பிரகடனத்தின் பொருள்? இன்றைய வி.எஸ்.அச்சுதானந்தனின் மதவெறியை கிளப்பிவிடும் அறிக்கையின் அன்றைய நகல்களை வாசிப்பது தோழர்களுக்கு நன்று.

அன்று கிறிஸ்தவர்களை பயந்தவர்கள் இன்று, முஸ்லிம்களை பார்த்து பயப்படுவது சுவராசியமான காட்சியாகும். இன்னொரு பிரிவு ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகம் எழுதி இஸ்லாத்தின் மகத்துவத்தை புகழ்ந்தனர். பத்திரிகை அதிபர் கெ.சுகுமாரன்,எ.கெ.பாஸ்கர், கெ.பி.தய்யல், சகோதரன் அய்யப்பன், பி.கே.குஞ்சுராமன் ஆகியோர் இஸ்லாத்தை மெச்சினர். புத்தமதத்தையும், சீக்கிய மதத்தையும் ஈழவர்கள் பரிசீலித்தனர்.

சீக்கிய அகாலிகள் பேட்டை என்ற ஊரில் வைத்து ஈழவத் தலைவர்களை சந்தித்தனர். பழமைவாதிகள் நடுங்கிப்போயினர். இப்பொழுது அந்த நடுக்கம் சி.பி.எம்மில் காணலாம்.

இந்தப் பிரச்சனையை அதாவது மதமாற்றத்தை புறந்தள்ள 1936 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கோயில் பிரவேசனத்தை விளம்பரம் செய்தனர். ஐக்கிய முன்னணியில் அங்கங்களாகவிருந்த முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சொந்தத் தலைவரான சி.கேசவனையும் புறக்கணித்துவிட்டு ஈழவர்கள் ஓடிச்சென்று கோயிலில் நுழைந்தனர். ஈழவ-கிறிஸ்தவ-முஸ்லிம் ஐக்கியமும் தகர்ந்தது, அத்துடன் ஒத்துழையாமை போராட்டமும் ஸ்தம்பித்தது. இத்தகைய வர்ணாசிரம தந்திரத்தைத்தான் இப்பொழுது சி.பி.எம் தலைமை கையாள்கிறது. அச்சுதானந்தன் அதன் கருவியாக மாறியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி சுல்தான்கள் கூறியதை வாயால் மொழிந்துள்ளார் அச்சுதானந்தன். பதிலடி வாங்க வி.எஸ்.அச்சுதானந்தனும், மதவெறியின் மணத்தை நுகர இதரத் தலைவர்களும், இதுதான் இன்று நாம் காணும் காட்சி.

20 வருடத்தில் கேரளாவை இஸ்லாமிய நாடாக மாற்று முயல்வதாக அல்லவா வி.எஸ்.அச்சுதானந்தனின் வர்க சித்தாந்தம் கூறுகிறது. அவ்வாறெனில், 750 வருடங்கள் டெல்லியை ஆண்டது முஸ்லிம்களான சுல்தான்களும், முகலாயர்களுமல்லவா?. அவர்கள் ஒருமாதத்திற்கு ஓராயிரம் 'லவ் ஜிஹாதை' நடத்தியிருந்தால் இந்தியாவை 750 ஆண்டுகளில் பரிபூரண இஸ்லாமிய நாடாக மாற்றியிருக்கலாமே? அன்று அவ்வாறு நடைபெறாததால்தான் இன்று கம்யூனிச தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டெல்லி சென்று இத்தகையதொரு மதவெறி அறிக்கையை வெளியிட முடிந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "சிவப்பு மதமும், சில அரசியல் புலம்பல்களும்"

Mohamed Ameen சொன்னது…

It was 1979 when Imam Khomeini’s Islamic Revolution dumped the so called king of kings Shahin Shah to the dustbin of history and brought Islam based democracy in Iran.

In 1980 Imam Khomeini wrote to the USSR Government asking them to open the doors for Islamic propagation in USSR and requested them to reopen all the closed Masjids in the country.

Imam Khomeini warned the USSR Government that all man made ideologies like capitalism and communism will be dumped on to the dust bin of history and only the God given ideology such as Islam will prevail.

The above article reinforces the words of Imam Khomeini and there is no alternative for the Umma to be united and march forward without leaning on to any ideology for the sake of temporary political gains.

கருத்துரையிடுக