ஆக,3:கஷ்மீரில் நடந்து வரும் கலவரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக கடந்த வாரம் அவரது பேச்சாளர் கூறியிருந்த நிலையில், பான் கி மூன் அவ்வாறு கூறவில்லை என்று தற்போது மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கஷ்மீரில் சமீப நாட்களாக நடந்து வரும் கலவரம், உயிரிழப்பு மற்றும் அங்கு நிலவும் பதற்றம் குறித்து பான் கி மூன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாகவும், பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும், கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் மூன் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹன் ஹக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கஷ்மீர் குறித்து பான் கி மூன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், ஐ.நா.வின் எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்திலும் கஷ்மீர் குறித்து கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை என்றும் ஐ.நா. அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஐ.நா. வின் இந்த மறுப்பறிக்கையை பார்க்கும்போது பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஹக், அதிகாரப்பூர்வமற்ற தன்னிச்சையான அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியா ஆட்சேபம் தெரிவித்து, அதன் காரணமாக ஐ.நா. தற்போது தனது கருத்திலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: on "கஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு பான் கி மூன் மறுப்பு"
கருத்துரையிடுக